மிளகு மற்றும் தேனின் அற்புதமான மருத்துவ குணங்கள்…
மிளகில் உள்ள சத்துக்கள்:தாது உப்புகள்
1. கால்சியம்
2. பாஸ்பரஸ்
3. இரும்பு
வைட்டமின்கள்1. தயாமின்
2. ரிபோபிலவின்
3. ரியாசின்
பசியின்மைக்கு:
ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.
சளித் தொல்லைக்கு:
இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் , மூக்கடைப்பு , தலைவலி எல்லாம் குணமாகும்.
+ There are no comments
Add yours