வாழைக்காயின் சிறப்புகள்

Estimated read time 1 min read
Spread the love

வாழைக்காய்  உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது.  வாழைப்பழங்களை விட வாழைக்காய்  பொதுவாக பெரியதாகவும் கடினமானதாகவும் இருக்கும், மிகவும் அடர்த்தியான தோலுடன் இருக்கும். வாழைக்காய் வேகவைக்கலாம், சுடலாம் அல்லது வறுக்கலாம்.

வாழைக்காயின்  நன்மைகள்  –  வாழைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள். எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களை தடுக்கின்றது  அவற்றை எவை என்று  பார்ப்போம்.  சர்க்கரை வியாதி  கட்டுபடுத்துகிறது,  வயிற்றில் புற்று நோய் ஏற்படாமல்  தடுக்கின்றது,  எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலுவிற்கும் வளர்ச்சி  பெறுகிறது,  அதீத உணர்ச்சிகள், தடுத்து மன அமைதியை தருகிறது,  உடலின் தசைகளில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைப்பதில் பேருதவி புரிகிறது,  எளிதில் வெளியேற்றி மலச்சிக்கலை போக்குகிறது, அதீத பசியை தடுத்து அதாவது,  அதிக அளவில் எடுக்கும் பசி உணர்வை கட்டுப்படுத்தி, குறைவாக உணவை உட்கொள்ளும் நிலையை ஏற்படுத்தும்,  இதய நலத்திற்கும்  பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது, வாழைக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது , கண்கள் ஒரு முக்கிய உறுப்பு வாழைக்காயில் வைட்டமின் எ அதிகம்  கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விழிப்படலம், கருவிழி ஆகியற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது,  சுறுசுறுப்பு    வாழைப்பழம் சமைத்து சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும். மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கச் செய்வதில் வாழைப்பழம் உதவுகிறது.

வாழைக்காய்அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு எளிமையான உணவாகும். ஆனால் வாழைப்பழத்தை விடவும் பச்சை வாழைக்காய் அதிக ஊட்டச்சத்து நன்மைகளை கொண்டது என்பது பலரும் அறியாத விஷயமாகும். பச்சை வாழைக்காயானது நமது உடலுக்கு என்ன மாதிரியான நன்மைகளை செய்கிறது வாழைக்காயை கொண்டு சாலடுகள், சிப்ஸ், கூட்டு, பொரியல் மற்றும் குழம்பு போன்ற உணவுகளை செய்யலாம்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours