பா.வே.. மாணிக்க நாயக்கர் அவர்களின் பிறந்த தினம் 🙏🙏
அறிவியல் தமிழ் வளர்த்த தமிழறிஞர். சென்னையில் பொறியியல் கல்வி கற்ற இவர் சென்னை அரசின் அளவைப் பெரும் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒலி நூலாராய்ச்சியில் ஈடிணையற்று விளங்கியவர். தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உலகின் கண்ணுள்ள எல்லா மொழிச் சொற்களையும் எழுத முடியுமென்று காட்டியவர். அறிவியற் கலைச்சொற்களுக்குத் தனித் தமிழ்ச் சொற்கள் அமைத்தவர்.
பின்வரும் சொற்கள் இவர் தமிழ்ப்படுத்திய சொற்களாகும்:
புள்ளி அல்லது குற்று – point
ஒன்றுவிட்ட, இடைவிட்ட – alternate
அடுத்த – adjucent
இடைவெட்டு – intersection
குவியம் – focus
நிலத்தின் அளவைக் கணிப்பது, வடிவ அளவை நூல் – geometry
கதிர் – ray
இயக்கம் – movement
தொகுப்பு – summary
நீர்மட்டம் – spirit level
விளம்பு தாள் – tracing paper
குறியளவை – algebra
and also : உலக சதுப்பு நில தினம்!