கரும்புச் சாறு என்பது அழுத்தப்பட்ட கரும்பிலிருந்து எடுக்கப்படும் திரவமாகும்.
கரும்பில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் ஊட்டச்சத்து நிறைந்தது, தோல் பளபளப்பு வரும், சிறுநீரக தொற்றுகள் ஏற்படாது,நச்சுக்களை நீக்குகிறது, உடனடி ஆற்றல் பெறலாம், நோய் எதிர்ப்பு திறன் கூடும், தொண்டை புண் ஆறும், எடை குறைப்புக்கு உதவும்,செரிமான திறன் மேம்படும், மலச்சிக்கல் இருக்காது, உடல் எரிச்சல் தீரும், மூளைக்கு நல்லது, புண்கள் ஆறும். உடல் சூடு அதிகமாக இருக்கும் போது, கரும்பு ஜூஸ் குடிப்பது உடலுக்கு நல்லது. இவை உங்கள் உடலை குளிர்ச்சியாகவும், உடலில் நீர் பற்றாக்குறையிலிருந்தும் பாதுகாக்கும். கரும்பு சாற்றில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் பல அமினோ அமிலங்கள் உள்ளது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் சிறந்தது.
இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் ஒன்றாக கரும்பு இருக்கிறது. கரும்பு தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பயிர் வகையாகும். மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள் கரும்பில் நினைத்து இருக்கிறது. இந்த கரும்பை நன்றாகப் பிழிந்து சாறெடுக்கடப்பட்ட கரும்பு ஜூஸ் மக்களால் அதிகம் விரும்பி அருந்தப்படுகிறது.
+ There are no comments
Add yours