International Minority Rights Day 🙏
உலக சிறுபான்மையினர் உரிமைகள் தினம் 🙏
1992 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியே ஐநா உலக சிறுபான்மையினர் உரிமைகள் தினமாக அறிவித்தது. தனிமனித உரிமை, மதம்சார்ந்த உரிமை, மொழி மற்றும் இனம் சார்ந்த உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் சிறுபான்மையினர் வரையறை செய்யப்பட்டு அவர்களுக்கான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்று ஐநா அன்றைய தினம் வெளியிட்ட பிரகடனத்தில் தெரிவித்தது.இந்தியாவில் உள்ள தேசிய சிறுபான்மையினர் நல ஆணையமும் இந்நாளை கொண்டாடி வருகிறது.மதநல்லிணக்கம், சிறுபான்மை அமைப்புகளுக்கிடையே ஒப்புரவு உள்ளிட்ட பணிகளை சிறுபான்மையினர் ஆணையம் நிறைவேற்றி வருகிறது.