சர்வதேச தொழிலதிபராக உருவெடுக்கும் நயன்தாரா

Estimated read time 1 min read
Spread the love

சரும பராமரிப்பு அழகு சாதன பொருட்களின் உற்பத்தி துறையில் அடியெடுத்து வைக்கும் நயன்தாரா

N9 SKIN
N9 SKIN

சிங்கப்பூர் தொழிலதிபர் டெய்சி மோர்கன் -பிரபல நடிகை நயன்தாரா- புகழ்பெற்ற இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் இணைந்து தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவில் தங்களது புதிய தொழிலைத் தொடங்குகிறார்கள். ‘9 ஸ்கின்’ என பெயரிடப்பட்டிருக்கும் இவர்களது அழகு சாதன பொருட்களின் வணிக முத்திரையை, மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் செப்டம்பர் 29ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார்கள்.

சரும பராமரிப்பு துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் டெய்சி மோர்கன் – தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வரும் நயன்தாராவின் நட்சத்திர ஈர்ப்பு – முன்னணி இயக்குநரான விக்னேஷ் சிவனின் படைப்பாற்றல்.. என இந்த மூவரும் கூட்டணி அமைத்து, தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கும், சரும பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களை உயர் தரத்துடன் வழங்குவதன் மூலம் தொழில் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தையில் நுழைவதன் மூலம்.. அவர்களுடைய பிராண்டான ‘9 ஸ்கின்’- இயற்கையான அழகை மேம்படுத்தும் புதுமையான தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களை வழங்கவிருக்கிறார்கள்.

கோலாலம்பூரில் ‘9 ஸ்கின்’ எனும் வணிக முத்திரையுடன் கூடிய சரும பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்கள்

9 SKIN
9 SKIN

கோலாகலமாக அறிமுகமாகிறது. டெய்சி மோர்கன்- நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஆகியோர் ஒன்றிணைந்து தங்களுடைய தனித்துவமான தோல் பராமரிப்பு பொருட்களை ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்துவதில் உற்சாகமாக உள்ளனர்‌. மேலும் உலகில் உள்ள தனி நபர்களின் தோல் பராமரிப்பு அனுபவங்களை மேம்படுத்துவதற்காக.. இந்த மூவரின் தனித்துவமான நிபுணத்துவத்தையும், பிரத்யேக அம்சத்தையும்.. அவர்களுடைய பொருட்கள் மூலம் கொண்டு வருகிறார்கள்.

தோல் பராமரிப்பு மற்றும் சரும பராமரிப்பு துறையில் முன்னணியில் உள்ள ‘9 ஸ்கின்’ எனும் வணிக முத்திரையின் நற்பெயரை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், செப்டம்பர் 29ஆம் தேதியன்று மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இதன் அறிமுகம் நடைபெறுகிறது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours