யானை பசிக்கு சோள பொறியாக ஆயிரம் ரூபாய் – ஜெயக்குமார்

திமுக தேர்தல் வாக்குறுதி நூறு சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் பேசியதற்கு தேர்தல் வாக்குறிதியை முழுமையாக நிறைவேற்றாமல் முழு பூசணிக்காயை அல்ல ஒரு பாராங்கல்லை சோற்றில் மறைக்கக் கூடிய வல்லமை படைத்த கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்
மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் திட்டம் நிறைவேற்றது குறித்துமின்சார கட்டணம், சொத்து வரி, பால் கட்டணம் எல்லாம் ஏற்றி விட்டு, தமிழக மக்களுக்கு யானை பசிக்கு சோளப்பொறி கொடுப்பது போல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றி இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு,
டெங்கு கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை, அமைச்சர் 14 கிலோ மீட்டர் நடந்து சென்று மக்களை பார்த்தார் என்று செய்தி வருகிறது எது தேவையோ அது செய்ய வேண்டும்.மின்சார கட்டணம், சொத்து வரி, பால் கட்டணம் எல்லாம் ஏற்றி விட்டு, தமிழக மக்களுக்கு யானை பசிக்கு சோள பொறியாக ஆயிரம் ரூபாய் கொடுத்து இருப்பதாக விமர்சித்து உள்ளார்
100% தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றி விட்டதாக முதல்வர் கூறியுள்ளதை குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு
கல்விக் கடன் ரத்து என்று சொன்னார்கள் செய்யவில்லை, நகை கடன் முழு தள்ளுபடி என்று சொல்லி 10 % தான் செய்தார்கள் எனவும். தேர்தல் வாக்குறிதியை முழுமையாக நிறைவேற்றாமல் முழு பூசணிக்காயை அல்ல ஒரு பாராங்கல்லை சோற்றில் மறைக்கக் கூடிய வல்லமை படைத்த கட்சி திராவிட முன்னேற்றக் கழக கட்சி என விமர்சித்துள்ளார்
+ There are no comments
Add yours