டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னையில் வரும் 19ம் தேதி தொடங்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளுக்கான அழைப்பிதழை வழங்கினார்.டெல்லியில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு மோடியிடம் அழைப்பிதழை வழங்கினார்.சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் ஜனவரி 19ஆம் தேதி முதல் ஜனவரி 31 வரை நடைபெற உள்ளது. கேலோ இந்தியா போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மொத்தம் 27 வகையான பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகிறது.