
K
HIGHLIGHTS :“சென்னை மாநகராட்சி சார்பாக 169 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளது ; 260 ரக்ஷாஷ பம்புகள் தாயார் நிலையில் உள்ளது”
“மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் சேர்ந்து நடத்திய பொதுமக்களுக்கு அலர்ட் கொடுக்கும் திட்டத்துக்கான சோதனை வெற்றி அடைந்துள்ளது; தேவைப்படும் போது அது பொதுமக்களுக்காக பயன்படுத்தப்படும்”
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர், கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்…..
சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
கடந்த 21:10 :23 முதல் தமிழ்நாட்டில் வடக்கு பருவமழை தூங்கி உள்ளது முதலமைச்சர் அவர்கள் இதை எதிர்கொள்வதற்கு வசதியாக 19. 9. 23 அன்று ஒரு ஆய்வு கூட்டம் நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு உரிய பணியை குறித்து அறிவித்தார்கள்,
வருகின்ற வடக்கு கிழக்கு பருவமழைக்காக செய்ய வேண்டிய அனைத்து பணியையும் தயார் நிலையில் செய்து வருகிறோம், ஏற்கனவே செய்த மழையை விட 43 சதவீதம் குறைவாக தான் பெய்துள்ளது, இன்றைக்கு மழை பெய்ய துவங்கி உள்ளது இன்றைக்கு கடற்கரை பகுதியில் மட்டுமே மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,
எஸ் பி ஆர் எஸ், என் டி ஆர் எஸ் 400 பேர் தயார் நிலையில் உள்ளார்கள், எங்கே தேவைப்படுகிறதோ அங்கு செல்ல தயாராக உள்ளார்கள்.
சென்னை பொறுத்தவரை கார்ப்பரேஷன் அதிகாரிகள் இரவு பகல் பாராமல் பணியை செய்து வருகிறார்கள்.
பொதுவாக எதிர்பார்த்த அளவு குறைவாக தான் மழை பெய்துள்ளது. ஒரு மாதங்களில் எப்படி இருக்கும் என்று பார்த்து அதற்கு ஏற்ப பணிகளை செய்து வருகிறோம். அதேபோல் சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க பணிகளை செய்து வருகிறோம்.
சென்னை மாநகராட்சி சார்பாக 169 நிவாரண முகாம்கள் தயாராக இருக்கிறது,. 260 ரக்ஷாஷ பம்புகள் தாயார் நிலையில் வைத்திருக்கிறோம், கடலோரத்தில் இருக்கும் மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு வேண்டிய தகவலை கூறி இருக்கிறோம், தற்போது வரை எந்த பாதிப்பும் இல்லை மேலும் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்வோம் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கமும் சேர்ந்து பொதுமக்களுக்கு அலர்ட் கொடுக்கும் திட்டத்துக்கான சோதனை நடந்தது அது வெற்றி அடைந்துள்ளது தேவைப்படும் பொழுது அது பொதுமக்களுக்காக பயன்படுத்தப்படும் என கூறினார்.