உலக நன்மை வேண்டி பெங்களூரு அங்காள பரமேஸ்வரி கோயிலில் பக்தர்கள் மிளகாய் வத்தல் யாகம்
கர்நாடக மாநிலம் பெங்களூரு மாகடி சாலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோயிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பெங்களூரு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி பக்தர்கள் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு மிளகாய் வத்தல் யாகம் நடத்தினர் அப்போது பக்தர்கள் அனைவரும் தங்களுக்கு நோய் நொடிகள் தீர பில்லி சூனியம் செய்வினை உள்ளிட்டவைகள் விலக வேண்டும் எனவும் யாக குண்டத்தில் காய்ந்த மிளகாய் வத்தல்களை போட்டு வழிபாடு நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு யாகத்தில் வளர்க்கப்பட்ட புனித நீர் மற்றும் பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனையடுத்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இரவு 12 மணி அளவில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஸ்ரீ பாலாஜி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த யாக பூஜையில் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டைச் ஆந்திரா சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
+ There are no comments
Add yours