தமிழக அரசை பாராட்டும் விதமாக ஆயிரம் கிலோ மலர்கள் வைத்து மாணவிகள் நன்றியை தெரிவித்தனர்
சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் அளித்த தமிழக அரசை பாராட்டும் விதமாக ஆயிரம் பூங்கொத்துக்கள் மற்றும் ஆயிரம் கிலோ மலர்கள் வைத்து ஆயிரம் மாணவிகள் பிரம்மாண்டமாக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்தனர்
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலமாக மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் துவக்கி வைத்தார். இதனையெடுத்து சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியில் பள்ளி மைதானத்தில் பத்தாயிரம் சதுர அடி பரப்பில் ரோஜா மலர்கள் தூவப்பட்டிருந்தன. இதன் மையப் பகுதியில் ஆயிரம் மாணவிகள் கையில் பூங்கொத்துகளுடன் ஆயிரம் என்ற எண்ணை வடிவமைத்து அமர்ந்திருந்தனர். இவர்கள் பூங்கொத்துகளை பல்வேறு கோணங்களில் அசைத்து நன்றி தெரிவித்தது கண்ணை கவரும் வகையில் இருந்தது. மேலும் கலைஞர்

மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதல்வருக்கு நன்றி என்ற வாசகங்களை ஆயிரம் கிலோ சாமந்தி மற்றும் ரோஜா மலர்களைக் கொண்டு வடிவமைத்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு எவர்வின் பள்ளி குழும சி.இ.ஓ மகேஸ்வரி மூத்த முதல்வர் புருஷோத்தமன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
+ There are no comments
Add yours