பெண்களை தவறாக பார்க்கக் கூடாது என்று சொல்லி வளர்க்க வேண்டும் – கனிமொழி பேச்சு

Estimated read time 1 min read
Spread the love

பெண்களை தவறாக பார்க்கக் கூடாது என்று சொல்லி வளர்க்க வேண்டும் – திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி பேச்சு

Kanimozhi
Kanimozhi

இன்று (21/08/2023) தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில்,தேசிய சைபர் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் (NCSRC) மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் “Cyber Crime against Women on Social Media” சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம் என்கிற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு: நாம் பெண்கள், பாதுகாக்கப்பட வேண்டியவர்கள், பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டியவர்கள் அப்படிச் சொல்லி சொல்லி வளர்ப்பார்கள். நாம் உடலைப் பார்த்து, நம்ம வெட்கப்படவேண்டும், முழுதாக ஆடை அணிந்து வெளியே வரவேண்டும். ஆண்கள் பெண்களைத் தவறாகப் பார்ப்பதற்குப் பெண்கள் தான் பொறுப்பு என்று சொல்லி வளர்ப்பார்கள். தனக்குப் பிடித்த உடை அணிந்து பெண்கள் கல்லூரிக்குப் போகமுடியாது. மற்றவர்கள் கண்களுக்கு உறுத்தக்கூடாது என்று தான் உடை அணிய சொல்வார்கள். அந்த பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்ப்பதில்லை. நீ எந்த பெண்ணையும் தவறாகப் பார்க்கக்கூடிய உரிமை உனக்கு கிடையாது. அதைச் சொல்லிக் கொடுத்து வளர்ப்பதில்லை.

நீ (பெண்கள்) பத்திரமாக இரு, நீ இப்படி ஆடை அணி, நீ இப்படி இரு, நீ வெளியில் போகாத, இந்த தடைகளை உடைத்திடவேண்டிய காலத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். சாதிக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். சில தடைகள் வரும், இந்த மாதிரி டெக்னாலஜி மூணாற்றித்தினால். வீட்டுக்கு உள்ள இருக்கும் பெண்களுக்கு ஆபத்து வருகிறது. எல்லா இடங்களிலும் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அந்த பிரச்சனைகளால், நாம் முடங்கி விடக்கூடாது. நாம் பிறகும் பொது நம்மோடு பிறந்து இந்த உடல். அதை வைத்த,யாரும் நம்மைக் கொச்சைப் படுத்த அனுமதிக்கக்கூடாது (I will accept my body and it is) அந்த சக்தி நமக்கு இருக்கவேண்டும்.

சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட புகைப்படத்திற்கு யாரும் லைக் பண்ண மாட்டார்கள் என்று வருத்தப்படக்கூடாது. You learn to appreciate yourself; you learn to respect yourself, that is the basic and most important thing. Nobody has the Rights to tell you, how you should do. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து நம் உடலை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் ஒரு பெண் இப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறேன், என்னை இப்படித்தான் உருவாக்கியிருக்கிறது. அந்தப் பெருமிதமும், திமிரும் இங்க இருக்கக்கூடிய ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்க வேண்டும். அதை வைத்துக்கொண்டு, யாரும் உங்களை மிரட்டவோ உருட்டவோ அனுமதிக்கக்கூடாது. நீங்கள் உயிரோடு இருக்கும் வரை தான் வாழ்க்கை. எந்த பிரச்சினையாக இருந்தாலும், உங்களை மதிப்பீடு செய்ய யாருக்கும் உரிமை இல்லை. Nobody has a Rights to Judge You.

இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தேசிய சைபர் பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் காலிராஜ், தேசிய சைபர் பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்தின் மண்டல இயக்குநர் கார்த்தி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், காமராஜ் கல்லூரி செயலாளர் சோமசுந்தரம், காமராஜ் கல்லூரி முதல்வர் ஐ.பூங்கோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Kanimozhi
Kanimozhi

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours