கதைகளில் நாங்கள் ஹீரோக்கள் இல்லை -‘வெப்பன்’

Estimated read time 1 min read
Spread the love

கதைகளில் நாங்கள் ஹீரோக்கள் இல்லை -‘வெப்பன்’

weapon
weapon

‘வெப்பன்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு. நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள சஸ்பென்ஸ்- ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘வெப்பன்’.

நடிகர் சத்யராஜ், “இது போன்ற கதைகளில் நாங்கள் ஹீரோக்கள் இல்லை. இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஸ்டண்ட் மாஸ்டர், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் டீம், தயாரிப்பாளர்கள் இவர்கள்தான் ரியல் ஹீரோஸ். இதுபோன்ற படங்களுக்கு தயாரிப்பாளர் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் செலவு செய்ய வேண்டும். ‘பாகுபலி’படத்தின் போது தயாரிப்பாளர் சோபுவை பார்த்து பிரபாஸ் என்னிடம் விளையாட்டாக, ‘பாருங்க சார், யாரோ பணம் போட்டு படம் எடுப்பது போல ஜாலியாக வந்து போகிறார்’ என்று சொல்வார். அதே போலவே மன்சூர் சாரும் உள்ளார். வசந்த் ரவி, தான்யா ஹோப், ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை எல்லாரும் சிறப்பாக செய்துள்ளனர்” என்றார்.

நடிகர் வசந்த் ரவி பேசியதாவது, “‘அஸ்வின்ஸ்’, ‘ஜெயிலர்’ படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. சரியான

weapon
weapon

கதை மீது நம்பிக்கை வைத்துள்ள தயாரிப்பாளர்கள் எங்கள் படத்திற்கு கிடைத்துள்ளார்கள். படத்தின் புரோமோஷன்களை அவ்வளவு சின்சியராக செய்து வருகிறார்கள். டிசி போல தமிழ், தெலுங்கிலும் இந்த கான்செப்ட் நிச்சயம் வெற்றி பெரும் என இயக்குனர் நம்பிக்கையாக இருந்தார். படத்தில் ஒரு சூப்பர் ஹுயூமன் கதாபாத்திரம் உள்ளது. அதை சத்யராஜ் சார் செய்கிறார் என இயக்குநர் சொன்னார். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. ராஜீவ் மேனன் சாரின் படங்களுக்கு நான் பெரிய ரசிகன். அவர் இந்தப் படத்தில் நடித்திருப்பது எனக்கு பெருமை. படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள்”.

நடிகை தான்யா ஹோப், “‘வெப்பன்’ படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி. என் கதாபாத்திரம் குறித்து அதிகம் நான் இங்கு சொல்ல முடியாது. நல்ல கான்செப்ட், வித்தியாசமான கதை. படம் பார்க்குபோது உங்களுக்கும் பிடிக்கும். இயக்குநர் குகன், தயாரிப்பாளர் மன்சூர், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours