நடிகர்கள் காவிரி விவகாரத்தில் மௌனமாக இருக்காமல் வாய் திறந்து பேச வேண்டும்

Estimated read time 1 min read
Spread the love

நடிகர்கள் காவிரி விவகாரத்தில் மௌனமாக இருக்காமல் வாய் திறந்து பேச வேண்டும்

காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்ய வேண்டாம், எங்களுக்கு தண்ணீர் இல்லாதபோது எப்படி உங்களுக்கு வழங்க முடியும்: காவிரி விவகாரம் குறித்து நடிகர் ரஜினி மௌனமாக இருக்காமல் வாய் திறக்க வேண்டும், ஸ்டாலின் படத்தை கிழித்தெறித்து வாட்டால் நாகராஜ் பேட்டி

கர்நாடகா – தமிழக மாநில எல்லையான அத்திப்பள்ளி என்னுமிடத்தில் காவிரி குறுக்கே மேகதாது அணைக்கட்ட தொடர்ந்து இடையூறு செய்வதையும் காவிரியில் நீர் கேட்கும் தமிழக அரசை கண்டித்து கன்னட சலுவலி வாடல் கட்சியின் தலைவர் வாட்டல் நாகராஜ் தலைமையில் கர்நாடகா ஜாக்ருதி வேதிகே உள்ளிட்ட கன்னட அமைப்புக்களை சேர்ந்தவர்கள் பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்..அப்போது தமிழக அரசை கண்டிக்கும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை கன்னட அமைப்பினர் கிழித்தெறிந்து சாலையில் அமர்ந்து போராடிய நிலையில்வாட்டல் நாகராஜை குண்டுகட்டாக தூக்கி 50க்கும் மேற்ப்பட்டோரை அத்திப்பள்ளி போலிசார் கைது செய்து வாகனங்களில் அழைத்து சென்றனர்முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு கன்னட மொழியிலேயே பேட்டியளித்த வாட்டல் நாகராஜ்:

வாட்டல் நாகராஜ்
வாட்டல் நாகராஜ்

நான் கையில் காலி குடம் வைத்திருப்பது தான் எங்கள் மாநிலத்தின் நிலைமை விவசாயம், குடிக்கவே நீரில்லை, இது ஸ்டாலினுக்கு புரியாமல் அரசியல் செய்து வருகிறார்கிருஷ்ண ராஜ சாகர் அணை, ஹேமாவதி அணைகளில் நீர் இல்லை ஆனால் ஸ்டாலின் பிளாக் மெயில் செய்து வருவது சரியல்லகுடிக்கவே நீர் இல்லை என்றால் பெங்களூர் கதி என்ன, அங்குள்ள தமிழர்களின் நிலை என்ன? முதல்வருக்கு உறவினர்கள் யாரும் கர்நாடகாவில் இல்லையா?இதில் தமிழக அரசு அரசியல் செய்வது சரியல்ல, தமிழக அரசை கண்டிப்பது எங்கள் உத்தேசமில்லை நீர் இருந்தால் கொடுப்போம் இப்போது இல்லைஇந்திய கூட்டணியில் காங்கிரஸ்,திமுக அங்கம் வகித்தாலும் கர்நாடகாவும், கன்னடர்களும் தான் முதன்மை என்றதுடன்

நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமலஹாசன் காவிரி விவகாரத்தில் மௌனமாக இருக்காமல் வாய் திறந்து பேச வேண்டும் எங்கள் வேதனை கண்ணீர் தெரியவில்லையா என்றார்..

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours