“விருஷபா” மோகன்லாலின் ஃபர்ஸ்ட் லுக்

Estimated read time 1 min read
Spread the love

“விருஷபா” படத்திலிருந்து வெளியான மோகன்லாலின் ஃபர்ஸ்ட் லுக், பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

“விருஷபா” படத்திலிருந்து மோகன்லாலின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்கள் , இணையத்தில் கொண்டாடி வரும் ரசிகர்கள் !!

விருஷபா
விருஷபா

ரசிகர்கள் மத்தியில், மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் ‘விருஷபா’ படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், நேற்று, ஆகஸ்ட் 24 அன்று, விருஷபா முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு  முடிவடைந்துவிட்டதாக அறிவித்தனர் மேலும்  ரசிகர்களின் உற்சாகத்தை கூட்டும் வகையில்  பான்-இந்திய அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் விருஷபா படத்திலிருந்து, மோகன்லாலின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். தற்போது இணையம் முழுக்க இந்த ஃபர்ஸ்ட்லுக் பெரும் பேசுபொருளாகி வருகிறது.
பர்ஸ்ட் லுக்கில் மோகன்லால் அரச உடையில்,  கையில் வாளுடன், தீவிரமான பார்வையுடன், மிரட்டலான லுக்கில் தோற்றமளிக்கிறார். மோகன்லாலின்  அரச அவதாரம் ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் திரைத்துறையினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மோகன்லாலின் சமூக வலைதள பக்கங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. . மோகன்லாலின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான பிறகு, படத்தின் எதிர்ப்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது.

விருஷபா படத்தில் மோகன்லால், ரோஷன் மேகா, ஷனாயா கபூர், சஹ்ரா எஸ் கான், ஸ்ரீகாந்த் மேகா மற்றும் ராகினி திவேதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2024  ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக விருஷபா இருக்கும்.
 

      and also  :  ஆரோக்கியம் தரும் பாதாம்

 

விருஷபா திரைப்படத்தை கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்குகின்றன. (ஏவிஎஸ் நிறுவனத்துக்காக) நந்த கிஷோர் இயக்கும் இந்தப் படத்தை அபிஷேக் வியாஸ், விஷால் குர்னானி, ஜூஹி பரேக் மேத்தா மற்றும் ஷ்யாம் சுந்தர் (ஃபர்ஸ்ட் ஸ்டெப் மூவிஸ்)  (கனெக்ட் மீடியா) வருண் மாத்தூர் மற்றும் சவுரப் மிஸ்ரா தயாரித்துள்ளனர்.. தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

You May Also Like

More From Author

1 Comment

Add yours

+ Leave a Comment