
prajin
சியோன் ராஜா எழுதி இயக்கி ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘சமூக விரோதி’.இவ்விழாவில் பல்வேறுபட்ட அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்
படத்தைப் பற்றி இயக்குநர் சியோன் ராஜா பேசும்போது,
“இந்தச் சமூக விரோதி படம் உண்மையில் சமூக விரோதிகள் யார்? சமூக விரோதிகளை யார் உருவாக்குகிறார்கள்? என்பதை மக்களிடம் அடையாளப்படுத்தி வெளிக்காட்டும் முயற்சியாக உருவாகியுள்ளது.இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் தேவை என்ற நோக்கில் இந்தப் படம் உருவாகி உள்ளது.இங்கே இத்தனை அரசியல் ஆளுமைகள் வந்துள்ளது அந்த நோக்கத்திற்கு ஆதரவு தருவதற்காகத்தான் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்தப் படத்திற்காகப் பலரையும் நாம் அணுகிக் கேட்டபோது அனைவரும் இந்தக் கதைக்காக நடித்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
நாஞ்சில் சம்பத் அவர்களிடம் கேட்டபோது முதலில் மறுத்தவர், பாத்திரத்தைக் கேட்டதும் அரை
மனதாக ஒப்புக்கொண்டார். ஆனால் படப்பிடிப்பில் கேமராவை ஆன் செய்ததும் ருத்ரதாண்டவமே ஆடிவிட்டார். அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தயாரிப்பாளர் ராஜன் அவர்களைக் கேட்டபோது ஒரு காட்சியில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்றார். மூன்று காட்சிகள் என்றேன். கதையைக் கேட்ட பிறகு நடித்துக் கொடுத்ததுடன் சம்பளமே வாங்கவில்லை. அந்த அளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
நாயகன் பிரஜின் கொடுத்த ஒத்துழைப்பு சாதாரணமானதல்ல. கேரவான் இல்லாமல் படபிடிப்பு முடித்த நாயகன் அவர்தான்.அவர் மேலும் வளர்வார். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் பேசப்படுவார்.நான் பொழுதுபோக்குக்காகப படம் எடுப்பவன் அல்ல.கலையை அரசியல் படுத்த நினைக்கிறேன். அந்த வகையில் தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். மக்கள் ஆதரவு தர வேண்டும் “என்றார்.
ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வசீகரன் பேசும்போது,
“முதலில் நான் இந்தப் படத்தின் தலைப்பைப் பாராட்டுகிறேன் அருமையான தலைப்பு .நான் சுற்றுப் பயணத்திலிருந்து வந்திருக்கிறேன். நாலைந்து நாட்களாகத் தூக்கம் இல்லை. இந்த முயற்சியை ஆதரிக்க வேண்டும் என்று நான் வந்துள்ளேன். பாலச்சந்தர் தண்ணீர் தண்ணீர் என்று ஒரு படமெடுத்துக் குடிநீர்ப் பிரச்சினையைச் சமூகப் பிரச்சினையாக மக்களிடம் பேச வைத்தார்.படமும் பெரிய வெற்றி பெற்றது.நம் நாட்டில் அசந்தால் தேசவிரோதி என்பார்கள்.தேசத்தைப் பற்றிக் கவலைப்படுபவனைத் தேச விரோதி என்பார்கள்.சமூகத்தைப் பற்றி கவலைப்படுபவனைச் சமூக விரோதி என்பார்கள்.இனிமேல் தேசவிரோதி என்றுதான் படம் எடுக்க வேண்டும் .பத்திரிகை போல சினிமாவிற்கும் அதிகமான சமூகப் பொறுப்பு உண்டு.எல்லாவற்றிலும் அரசியல் உண்டு. அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. முன்பெல்லாம் என்னைக் கல்லூரிகளுக்குப் பேச அழைப்பார்கள். இப்போது அழைப்பதில்லை.கல்லூரிகளில் அரசியல் அறிவியல் பாடமாக உள்ளது. ஆனால் அரசியல்வாதிகளை அழைக்கமாட்டார்கள்.நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு லோக் ஆயுக்தா வந்த பிறகு தான் கர்நாடகத்தில் எடியூரப்பாவை விரட்டி அடிக்க முடிந்தது. இங்கேயும் வர வேண்டுமென்று போராடினோம்.நான் பத்து நாள் உண்ணாவிரதம் இருந்தேன்.இந்தப் படத்துக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு” என்றார்.