
TIGER4
HIGHLIGHTS : “குளியலறையில் டவல் சண்டைக்காட்சியை படமாக்கியபோது அழகான காவியமாக இருந்தது” ; ‘டைகர் 3’ நடிகை மிஷ்ஷேல் லீ
அதிரடியான சண்டைக்காட்சிகளை படமாக்குவதற்கு பெயர் பெற்ற ஹாலிவுட் நடிகை மிஷ்ஷேல் லீ, ஸ்கார்லட் ஜாக்சனுடன் ‘பிளாக் விடோ’விலும், ஜானி டெப்புடன் ‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்ஸ்’ படத்திலும் பிராட் பிட்டுடன் ‘புல்லட் ட்ரெய்ன்’ மற்றும் டாம் ஹார்டியுடன் ‘வெனோம்’ படத்திலும் நடித்திருக்கிறார்.. தற்போது சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் நடிப்பில் கண்கவர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள ‘டைகர் 3’ படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் கத்ரீனாவுடன் நீண்ட நேரம் இடம்பெறக்கூடிய ரொம்பவே வைரலான துருக்கி குளியலறை சண்டைகாட்சி ஒன்றிலும் நடித்திருக்கிறார். ‘டைகர் 3’ டிரைலரிலிருந்து அந்த டவல் சண்டைக்காட்சி மிகப்பெரிய பேசுபொருளாக ஆகியிருக்கிறது என்பதில் மிஷ்ஷேல் லீக்கு பெரிய ஆச்சர்யம் எதுவும் இல்லை..
கத்ரீனாவும் தானும் இந்த காட்சியை படமாக்குவதற்கு முன்னதாக இரண்டு வாரங்களுக்கு மேல் ஒத்திகை பார்த்தோம் என கூறுகிறார் மிஷ்ஷேல் லீ. அவர் கூறும்போது, “நான் ஆச்சர்யப்படவில்லை. நாங்கள் இதை படமாக்கியபோது அழகான காவியமாக இருந்தது. இரண்டு வாரங்களுக்கு மேல் நாங்கள் இந்த சண்டைக்காட்சியை கற்றுக்கொண்டதுடன் பயிற்சியும் எடுத்துக்கொண்டு அதன் பின்னரே இதை படமாக்கினோம். இதற்காக வடிவமைக்கப்பட்ட அரங்கு உண்மையிலே அழகியலாக இருந்ததுடன் இந்த சண்டைகாட்சியில் நடிப்பதற்கு உண்மையிலேயே வேடிக்கையாகவும் இருந்தது. இப்ப்டி இரு சர்வதேச திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது அற்புதமாக இருந்தது” என்கிறார்.ஆக்சன் காட்சிகளில் நடிக்கும்போது கத்ரீனாவின் அர்ப்பணிப்பு உணர்வை பார்த்து அவரை இன்னும் புகழ்ந்து தள்ளுகிறார் மிஷ்ஷேல். அவர் கூறுகையில், “கத்ரீனாவால் அழகாகவும் தொழில்முறை நடிகையாகவும் இருக்க முடிந்தது. துல்லியமான நகர்வுகளை பெற கடினமாக அவர் உழைத்ததுடன் அனைத்து நகர்வுகளுமே வேகமாக இருப்பதையும் அவர் உறுதி செய்தார். நடனத்தில் அவருக்கு அனுபவம் இருந்ததால் அவருடன் இணைந்து பணியாற்றுவது ரொம்பவே எளிதாக இருந்தது. நாங்கள் வியர்வை சிந்தி உழைத்தோம்” என்கிறார்..
யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படமாக ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் மனீஷ் சர்மா இயக்கத்தில் இந்த ‘டைகர் 3’ உருவாகியுள்ளது. இந்தப்படம் இந்தவருட தீபாவளி ரிலீஸாக வரும் நவம்பர்-12ஆம் தேதி ஞாயிறன்று ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.