தி காஷ்மீர் ஃபைல்ஸ் – தேசிய விருதை வென்று

Estimated read time 1 min read
Spread the love

அபிஷேக் அகர்வாலின் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படம்,  69 வது தேசிய திரைப்பட விருதுகள் 2023 இல்,  தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதை வென்றுள்ளது

FILES
FILES

அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஐ ஆம் புத்தா புரடக்‌ஷன் இணைந்து  தயாரித்த “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”  திரைப்படம், 69வது தேசிய திரைப்பட விருது 2023 இல் தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதை வென்றுள்ளது.

இது குறித்து பேசிய தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், “69 வது தேசிய திரைப்பட விருதுகள் 2023ல்  ஜூரிகள் எங்கள் படத்திற்கு வழங்கிய கவுரவத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். காஷ்மீர் ஃபைல்ஸ் ஒரு அழுத்தமான கருவை கொண்ட ஒரு சிறப்பான திரைப்படமாகும். இந்த விருதை காஷ்மீரி பண்டிட்களுக்கும்,  அவர்களின் வலியை உணர்ந்த  உலகம் முழுதும்  உள்ள மக்களுக்கும், இப்படத்திற்காக உழைத்த  அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என்றார்.எங்களையும் எங்கள் கதை சொல்லும் திறனையும் நம்பிய காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்கிறேன். ஒரு வகையில் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” தயாரிப்பில் அவர்கள் சம பங்களிப்பாளர்கள் மற்றும் இந்த விருது, அங்கீகாரம் மற்றும் பாராட்டுக்கள் எங்களுடையது போலவே, அவர்களுக்கும் உரியது.

காஷ்மீர் ஃபைல்ஸ் 1990 ஆம் ஆண்டு இந்திய நிர்வாக காஷ்மீரில் இருந்து காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதை மையமாகக் கொண்டது. இப்படத்தை விவேக் அக்னிஹோத்ரி இயக்கியிருந்தார் மற்றும் தேஜ் நாராயண் அகர்வால், அபிஷேக் அகர்வால், பல்லவி ஜோஷி மற்றும் விவேக் அக்னிஹோத்ரி ஆகியோர் இணந்து  தயாரித்திருந்தனர்.கார்த்திகேயா 2  படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு,  அபிஷேக் அகர்வால் விரைவில் மாஸ் மஹாராஜா, ரவிதேஜா நடிப்பில்,   டைகர் நாகேஸ்வர ராவ், எனும்   ஒரு பான்-இந்தியன் பிளாக்பஸ்டர் படத்தினை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளனர், இப்படம் அக்டோபர் 20, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours