குடிநீர் வடிகால் வாரியத்தின் உட்கோட்ட பராமரிப்பு நிலையத்தை கனிமொழி ஆய்வு செய்தார்

இன்று தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள மஞ்சல்நீர்காயல் ஊராட்சியிலுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் உட்கோட்ட பராமரிப்பு நிலையத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி ஆய்வு செய்தார். விரைவில் குடிநீர் குழாய்களைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற உள்ள நிலையில், குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர்
குழாய்களை மாற்ற ஒரு மாதம் காலம் ஆகவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்று வட்டார கிராமங்களுக்கு தண்ணீர் லாரி மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் சரவணன் IAS, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
and also :‘டெவில்’ சம்யுக்தா நடிக்கும்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடு
Tamil Nadu Drinking Water and Drainage Board
+ There are no comments
Add yours