டேக்வாண்டோ விளையாடும் வீரர்கள் எவரின் காலிலும் விழக்கூடாது என்று அறிவுறுத்திய – திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி.

நேற்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், உலக அளவிலான டேக்வாண்டா போட்டியில் இந்திய அணி சார்பாகக் கலந்து கொள்ளத் தேர்வு பெற்ற வீராங்கனை மகிஷா பிரியங்காக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி நேரில் சந்தித்துப் பாராட்டு தெரிவித்தார். வீராங்கனை மகிஷா பிரியங்காக்கு திமுக எம்.பி கனிமொழியின் காலில் விழுந்து ஆசி பெற்ற போது இப்படியெல்லாம் செய்யக் கூடாது எனக் கூறி, டேக்வாண்டோ விளையாடும் வீரர்கள் எவரின் காலிலும் விழக்கூடாது என்று அறிவுறுத்தி வாழ்த்தினர்.
இந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டி 19.07.2023 முதல் 22.07.2023 வரை மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்-ல் வைத்து நடைபெற்றது.

இதில் 12 முதல் 14 வயதிற்குப்பட்டோருக்கான 144 செ.மீ உயரப் பிரிவில் காமாட்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மகிஷா பிரியங்கா கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்று, இந்திய அணிக்குத் தேர்வு பெற்றுள்ளார். 28.08.2023 முதல் 01.09.2023 வரை ஐரோப்பா கண்டம் சரோஜ்வா, போஸ்னிகா எனும் இடத்தில் நடைபெறவுள்ள உலக அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு இந்திய அணி சார்பாக கலந்து கொள்ள உள்ளார்.
மேலும் 05.09.2023 முதல் 08.09.2023 வரை லெபனான் எனும் இடத்தில் நடைபெற உள்ள 5வது ஆசிய அளவிலான டேக்வோண்டா போட்டியிலும் இந்திய அணி சார்பாக கலந்து கொள்ளத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிகழ்ச்சியின் போது மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி வார்டு கவுன்சிலர் சரவணன், பயிற்சியாளர் ராமலிங்கபாரதி ஆகியோர் உடனிருந்தார்.
+ There are no comments
Add yours