நடிகர்கள் விமல், சூரி இணைந்துள்ள ‘படவா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

Estimated read time 1 min read
Spread the love

நடிகர்கள் விமல், சூரி நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்துள்ள ‘படவா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

BADAVA
BADAVA

கே.வி. நந்தா இப்படத்தை இயக்கியுள்ளார். கலை இயக்குந‌ராக சரவண அபிராமன், படத்தொகுப்பாளராக வினோத் கண்ணா பொறுப்பேற்றுள்ளனர்.சண்டைக்காட்சிகளை சிறுத்தை கணேஷ், நடனத்தை தினேஷ், ஸ்ரீதர் மற்றும் தினா ஆகியோரும் வடிவமைத்துள்ளனர். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனித்து வருகிறார். பாடல்களை ஜான் பீட்டர், விவேகா, கபிலன் வைரமுத்து, இளையகம்பன், ஸ்வர்ணலதா ஆகியோர் எழுதியுள்ளனர்.

இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஜான் பீட்டர் பேசியதாவது…

அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இந்தப் படத்தில் சூரி சார் பெரிய கேரக்டர் செய்துள்ளார். அவர் சார்பாகவும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. அனைவரையும் வாழ்த்த வரவேற்கிறேன்.

கவிஞர் இளையகம்பன் பேசியதாவது…

‘படவா’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். என் அருமை இசையமைப்பாளர் ஜான் பீட்டர் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். அவரது பெரிய முயற்சியில் உருவாகின்ற ‘படவா’ திரைப்படம் ஒரு அற்புதமான திரை சூழலை உருவாக்கி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. இந்த திரைப்படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன. அனைத்து பாடல்களையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். இந்த திரைப்படத்தின் முகப்புப் பாடலை நான் எழுதியிருக்கின்றேன். பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பாக அமைந்திருக்கின்றன. அனைவருக்கும் வாழ்த்துகள்.

கலை இயக்குநர் சரவண அபிராமன் பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம், படவா திரைப்படத்தில் நவரசங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன‌. இந்த படத்திற்கு இசையமைப்பாளரும் தயாரிப்பாளரும் ஜான் பீட்டர் அவர்கள் தான். விமல் மிகப்பெரிய நடிகர், இந்த திரைப்படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும், சூரி அவர்களுக்கும் இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.

ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் பேசியதாவது…

இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த படம் மிகவும் நன்றாக உருவாகி உள்ளது. என் உடனிருந்த அனைவருக்கும் நன்றி.

 

You May Also Like

More From Author

1 Comment

Add yours

+ Leave a Comment