மனசாட்சி உள்ளவர்கள் குறை கூற மாட்டார்கள் – அமைச்சர் பி கே சேகர்பாபு

Estimated read time 0 min read
Spread the love

மனசாட்சி உள்ளவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை குறை கூற மாட்டார்கள் என சென்னை கொளத்தூரில் அமைச்சர் பி.கே சேகர் பாபு பேட்டி

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி கே சேகர்பாபு ;

1oo0

தமிழகம் மட்டுமல்ல ஒன்றியம் மட்டும் அல்ல உலகமே உற்றுப் பார்க்கும் அளவிற்கு மகளீர்களுக்கு கலைஞர் உரிமைத்தொகை வழங்குகின்ற திட்டத்தை நேற்றைக்கு காஞ்சிபுரத்தில் முதல்வர் துவக்கி வைத்து ஒரு கோடியே 6 லட்சத்து ஐம்பதாயிரம் பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கி சரித்திரத்தில் இடம்பெற்றார். அவர்களுக்கு தங்களுடைய நன்றியை தெரிவிக்கின்ற வகையில் எவர்வின் பள்ளி குழுமத்தின் சார்பில் ஆயிரம் மாணவிகள் பங்கேற்று கையில் பூந்தத்தோடு மலர்களோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாசகங்களும் ஆயிரம் என்று ஆயிரம் மாணவிகள் தங்களையே செதுக்கி ஆயிரத்தை வடிவமைத்ததும் பூக்களால் தமிழக முதல்வருக்கு வாழ்த்து சொல்லி மனதால் அவர்களை வாழ்த்தி இன்னும் பல்லாண்டு காலம் வாழ்க இந்த தமிழகத்தை அரை நூற்றாண்டு காலம் ஆண்டு இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை குறிப்பாக மகளிர்களுக்கு பயன்பெறுகின்ற திட்டங்களை அறிவிக்க வேண்டும் என முதல்வரை வாழ்த்தியது மிகுந்த மன மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1000

எவர்வின் குழுமத்திற்கு தமிழக முதல்வர்அவர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பை ஏற்ற நாள் முதல் கொரோனா காலகட்டத்தில் நான்காயிரம் ரூபாய் அறிவித்த நாளாக இருந்தாலும் சரி. மகளிருக்கு விடியல் பயணம் என்றாலும் சரி. சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி என்றாலும் சரி. நகைக்கடன் தள்ளுபடி என்றாலும் சரி. நான் முதல்வர் திட்டம் என்றாலும் சரி. கல்லூரி ஊக்கத்தொகை திட்டம் என்றாலும் சரி. பெண்ணினத்தின் முன்னேற்றத்திற்காக பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகின்ற முதலமைச்சரை இன்றைக்கு தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து தாய்மார்களும் பாராட்டி புகழ்ந்து போற்றுவது பார்க்கும்போது நீண்ட நெடிய உடல் ஆரோக்கியத்துடன் அவர் தொடர்ந்து நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கை தருகின்றது. அந்த வகையில் சிறப்பு வாய்ந்த இந்த திட்டத்தை ஒட்டுமொத்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களும் செயல்படுத்துவதற்கு ஆர்வத்தோடு உள்ளார்கள் இது நமது முதல்வருக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் உள்ளது.

2 1000

ஒரு பெரிய திட்டம் செயல்படுத்துகின்ற போது சிறு சிறு பிரச்சனைகள் வரத்தான் செய்யும் ஓரிருநாளில் அது சரி செய்யப்பட்டு விடும். முதல்வரின் ஓராண்டு தொடர் நடவடிக்கையால் ஒவ்வொரு பிரச்சனையும் அவரே நேரடியாக அணுகி பிரச்சனைகளை தீர்த்து வைத்து வருகிறார். அந்த வகையில் நேற்று இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கினாலும் நேற்றைய முந்தினமே பலருக்கும் இந்த திட்டத்தின் வாயிலாக பணம் சென்றடைந்து விட்டது. இதனால் இந்த திட்டத்தை பற்றி எந்தவித குறைகளும் கூற முடியாதவர்கள் ஏதாவது கிடைக்குமா என எதிர்பார்க்கிறார்கள். முதல்வரின் கனவு திட்டம் முதல்வரின் தொலைநோக்கு திட்டம் இது முதல்வரின் திட்டமிடலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி மனசாட்சி உள்ள யாரும் இந்த திட்டத்தை குறை சொல்ல மாட்டார்கள் என தெரிவித்தார்

You May Also Like

More From Author

1 Comment

Add yours

+ Leave a Comment