‘மக்கள் களம்’ குறை கேட்டல் நிகழ்ச்சி- கனிமொழி
குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி கேட்ட பெண்: உடனடியாக ஏற்பாடு செய்த கனிமொழி கருணாநிதி எம்.பி.!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் சோழபுரம் ஊராட்சியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்ற ‘மக்கள் களம்’ மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சியில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
அப்போது, கடம்பூர் வட்டாரம், சோழபுரம் பகுதியில் வசிக்கும் ராஜலட்சுமி என்பவர் தனது 5 வயது மகள் தேன்மொழி என்ற குழந்தைக்கு பேசும் திறன் குறைபாட்டினை சரிசெய்வதற்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கனிமொழி எம்.பியிடம் மனு அளித்தார்.
இதையடுத்து, அந்த மனுவை உடனடியாக பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவர்களிடம் கனிமொழி எம்.பி. அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, மக்களை தேடி மருத்துவக்குழுவினர் தேன்மொழியின் இல்லத்திற்கே சென்று அவரை பரிசோதனை செய்து Speech Theraphy இனி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைதோறும் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மூலம் குழந்தையின் பேசும் திறன் விரைவில் மேம்படும் என்று மருத்துவக்குழுவினர் தெரிவித்ததாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
‘மக்கள் களம்’ நிகழ்ச்சியின்போது, குழந்தைக்கு பேசும் திறன் குறை பாட்டினை சரி செய்வதற்கு மனு அளித்த உடனேயே, அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க கனிமொழி எம்.பி ஏற்பாடு செய்தார். ‘மக்கள் களம்’ ;மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
+ There are no comments
Add yours