மறைந்த 64 கலைஞர்களுக்கு அஞ்சலி -தென்னிந்திய நடிகர் சங்க கூட்டம்

Estimated read time 1 min read
Spread the love

மறைந்த 64 கலைஞர்களுக்கு அஞ்சலி -தென்னிந்திய நடிகர் சங்க கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்2
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்2

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் இன்று  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் MP.விஸ்வநாதன் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, உறுப்பினர்கள் லதா, சச்சு, சத்யபிரியா, குஷ்பூ, கோவை சரளா, லலிதகுமாரி, தேவயானி, சோனியா வெங்கட் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். சமீபத்தில் மறைந்த 64 கலைஞர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.இன்றைய பொதுக்குழு கூட்டத்தின் தலைமையை நாசர் ஏற்றுக்கொள்ள அதை துணைத்தலைவர் பூச்சி S.முருகன் முன்மொழிய, லதா அதை வழிமொழிந்தார்.பொதுச்செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கோவை சரளா 2022-2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வாசித்தார்.2023-2024 ஆம் ஆண்டுக்கான வழக்கறிஞர் மற்றும் கணக்குத் தணிக்கையாளர் அறிமுகம் செய்து ஒப்புதல் பெறப்பட்டது. தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள் நடைபெற்றது.கட்டிட நிதி மற்றும் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்து பொருளாளர் கார்த்தி விளக்கம் அளித்தார்.கடந்த கால நிர்வாக செயல்பாடுகள், புதிய கட்டிடம் கட்டி முடிப்பதற்கு வங்கி கடன், நட்சத்திரங்களிடம் நிதி திரட்டுதல், நடத்திர கலைவிழா நடத்துதல் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கி பொதுச்செயலாளர் விஷால் ஒப்புதல் பெற்றார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours