நாசர் எதிர்கால திட்டங்கள் குறித்து உரை-தென்னிந்திய நடிகர் சங்க கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் ,தலைவர் நாசர் நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து உரையாற்றினார். அதைத் தொடர்ந்து துணை தலைவர் பூச்சி S.முருகன் நன்றியுரை வழங்க நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு பொதுக்குழு கூடம் இனிதே நிறைவடைந்தது.இந்த நிகழ்வில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கண் பரிசோதனை செய்த டாக்டர் விஜய் சங்கர், முழு உடல் பரிசோதனை செய்த அப்பல்லோ டாக்டர் சந்திரசேகர், வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன்,ஆடிட்டர் ஶ்ரீராம் சுந்தர் , பிஆர்ஒ ஜான்சன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவிக்கப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளுடன் நடிகர்கள் லதா சேதுபதி, சச்சு, ராஜேஷ், பசுபதி,அஜய் ரத்தினம், கோவை சரளா, விக்னேஷ், சரவணன், நந்தா, ஹேமசந்திரன், ஶ்ரீமன், பிரேம்குமார், தளபதி தினேஷ்,எம்.ஏ.பிரகாஷ், வாசுதேவன், ரத்தினசபாபதி, காளிமுத்து, குஷ்பு, மற்றும் சங்க மேலாளர் தாமராஜ் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியை ஶ்ரீமன் தொகுத்து வழங்கினார்,முடிவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
+ There are no comments
Add yours