தூக்கம்

Estimated read time 1 min read
Spread the love

தூக்கம்

sleeping
sleeping

மனிதனுக்கு அவசியத் தேவை. ஒருவருடைய ஆழ்ந்த தூக்கமேஅவரை எப்போதும் விழிப்பு உடையவராக இருக்கச் செய்யும்.ஆழ்ந்த தூக்கம் தான் மனிதனை ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.இந்தத் தூக்கம் தான்உடலில் மாற்றம் நன்கு நடைபெற்று உடல் வளர்ச்சி அடையப் பெரிதும் உதவுகிறது. அனைத்து உறுப்புகளும் புத்துணர்வும் பலமும் பெற ஏதுவாகிறது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.நரம்பு, தசை, எலும்பு சம்பந்தப்பட்ட மண்டலங்களைப் பலப்படுத்துகிறது.மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எது சரியில்லாமல் போனாலும் முதலில் பறிபோவது தூக்கம் தான்.தூக்கம் என்பது மனிதர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று.ஒரு நாளின் வெற்றி என்பது அதற்கு முந்தைய இரவில் நாம் எவ்வளவு நேரம் தூங்கினோம் என்பதைப் பொருத்தே அமைகிறது.இரவு சரியாக தூங்கவில்லையெனில் அடுத்த நாள் முழுவதும்பதட்டத்துடனும், கோபத்துடனும் பெரும்பாலானவர்களுக்குஅந்த நாள் செல்கிறது.அன்றைய நாளின் சோர்வுக்கு மருந்தாகவும், அடுத்த நாள் வேலைக்கு விதையாகவும் இருப்பது நிம்மதியான தூக்கம் தான்.தூக்கம் போனாலேநிம்மதி போய் விடும்.ஆரோக்கியம் போய் விடும்.இன்றும் லட்சக்கணக்கானோர் தூக்கத்தைத் தொலைத்த வாழ்வை வாழ்ந்து வருகின்றனர்.நிம்மதியான ஆழ்ந்ததூக்கத்திற்குப் பல வழிமுறைகள் உள்ளன.அவை.

இரவு தூக்கம் தான் நல்லது.பகலில் சாப்பிட்ட பிறகு 20 நிமிடங்களுக்குத் தூங்கலாம்.ஆனால், நீண்ட நேரம் தூங்கக் கூடாது.மனித ஆரோக்கியத்தையே ஆட்டிப் பார்க்கும் தூக்கத்தைப் பெற முறையான உணவும், உடற்பயிற்சியும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.நிம்மதியான தூக்கத்தைப் பெற நினைப்பவர்கள், அமைதியான, காற்று வசதி நன்கு கொண்டஅறையில் தூங்க வேண்டும்.மெத்தை மற்றும் தலையணைகள் சரியான நிலையில் இருக்க வேண்டும். காலையில் எழும் போது முகுது வலி, கழுத்து வலி, உடல் வலி போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால் உங்கள் படுக்கை சரியில்லை என அர்த்தம்.சத்தம் இல்லாத சுற்றுச்சூழலில் தூங்குவதும் முக்கியம். விளக்கு வெளிச்சத்தில் தூங்காமல், இருள் நிறைந்த அறையில் தூங்க வேண்டியது அவசியம்.இரவு நேரத்தில் அதிக நீர் அருந்துவது உங்கள் தூக்கத்தைக் கெடுக்கக் கூடியது. தாகத்தால் தூக்கம் கெடாமலிருக்க தூங்குவதற்கு முன்னரே போதுமான அளவு தண்ணீர் குடித்து விட வேண்டும்.அதே நேரம் இரவில் உடலில் அதிகமாக சேர்ந்துள்ள சிறுநீரை வெளியேற்ற நீங்கள் எழ வேண்டியிருக்கும்.உடலின் கடிகாரத்தை முதலில் சீராக்குங்கள். சாப்பிடுவது, படுக்கைக்குச் செல்வது, எழுவது என அனைத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வதை வழக்கமாக்குங்கள். நேரத்திலேயே உறங்கி நேரத்திலேயே எழும் பழக்கத்தை உருவாக்குங்கள்.முறையான நேரப்படி, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் தூக்கமின்மைதொந்தரவு தீரும்.

மன அழுத்தையும் குறைக்க வேண்டும். இல்லை என்றால் தூக்கமின்மை தீராத துன்பத்தைக் கொண்டு வந்து சேர்த்து விடும்.மனித வாழ்வில் மூன்றில் ஒரு பகுதி தூக்கம் தான். நாம் பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்க உதவுவது , இரவில் நாம் மேற்கொள்ளும்ஆழமான தூக்கம் தான்.உடலும் ,மனமும் ஒருங்கே ஓய்வு எடுத்தால் தான் சிறந்த தூக்கம் உண்டாகும்களைப்புற்ற உடல் உறுப்புகள் மற்றும் மனதிற்கு இயற்கை கொடுத்த ஓய்வு தான் தூக்கம் என்பது.எல்லாவற்றிற்கும் மேலாகஒழுக்கமும் , சுயகட்டுப்பாடும் இருக்கும் ஒருவருக்கு தூக்கம் என்பது ஒரு ஆனந்தமான பயணம்.இந்த ஆனந்தத்தினால் நல்ல ஆரோக்கியம் பெறலாம்.

குறிப்பு: இந்தத் தகவல் இணையத்தில் கிடைக்கும் சந்தேகம் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. s tv கட்டுரை தொடர்பான உள்ளீடு அல்லது தகவலைச் சரிபார்க்கவில்லை. எந்தவொரு தகவலையும் சந்தேகங்களையும் செயல்படுத்துவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு முன் பொருத்தமான தொழில்முறை ஆலோசனையைப் பெறவும்.இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல்களை மட்டுமே வழங்குகிறது. சரியான தகவலுக்கு எப்போதும் ஒரு நிபுணர் அல்லது உங்கள் சொந்த மருத்துவரை அணுகவும்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours