“தடை உடை” படத்தின் சிம்ஹா  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Estimated read time 1 min read
Spread the love
சிம்ஹா நடிப்பில், “தடை உடை” படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

Mudhra’s film factory தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் ராகேஷ் N.S இயக்கத்தில். நடிகர் சிம்ஹா நடிக்கும், கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான “தடை உடை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

simha
simha

சூது கவ்வும் பட இயக்குநர் நலன் குமாரசாமி, எங்கேயும் எப்போதும் சரவணன், மற்றும் கட்டப்பாவை காணோம் பட இயக்குநர் மணி செய்யோன் ஆகிய மூவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிய ராகேஷ் N.S  இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகிறது.  நகரம், கிராமம் என இரு இடங்களில் கதை நடப்பதாக, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சிவகங்கை கிராமப்பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.  அறிமுக இசையமைப்பாளர் ஶ்ரீ இசையில் இப்படத்தின் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். சமீபத்தில் தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார்.

கதையின் நாயகனாக சிம்ஹா நடிக்க, நாயகியாக மிஷா ரங் நடித்துள்ளார். இவர்களுடன் ரோகிணி, செந்தில், பிரபு,  சந்தான பாரதி, செல் முருகன், சரத் ரவி தங்கதுரை, தீபக் ரமேஷ், மணிகண்ட பிரபு, சுப்பிரமணியம் சிவா, ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இப்படத்தில் முதன் முறையாக முழு நீளக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்,  குடும்பத்துடன் அனைவரும் ரசித்துக்  கொண்டாட, ஒரு கலக்கலான திரைப்படம் இதுவென்பதை உறுதி செய்வதாக உள்ளது.  அசத்தலாக அமைந்துள்ள இந்த  ஃபர்ஸ்ட் லுக்கை, ரசிகர்கள் பாராட்டிப் பகிர்ந்து வருகின்றனர்.

பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை Mudhra’s film factory சார்பில் ரேஷ்மி மேனன் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
தொழில் நுட்ப குழுவினர்
எழுத்து இயக்கம் – ராகேஷ் N.S
தயாரிப்பு – ரேஷ்மி மேனன்
ஒளிப்பதிவு –  K.A.சக்திவேல்
இசை –  ஸ்ரீ
பின்னணி இசை- ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள் –  கவிப்பேரரசு வைரமுத்து
படத்தொகுப்பு –  பொன் கதிரேஷ் PK
கூடுதல் திரைக்கதை –  சாய்ராம் விஷ்வா
லைன் புரடியூசர் –  திலீப் குமார்
நிர்வாக தயாரிப்பு –  R.P.பால கோபி
கலை – M.தேவேந்திரன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours