ஜவான் படத்திலிருந்து ‘நாட் ராமையா வஸ்தாவையா’ பாடல் வெளியானது

Estimated read time 1 min read
Spread the love

 பார்ட்டி மூடுக்கு இழுத்துச் செல்லும் கிங்கான் ஷாருக்கான் !, ஜவான் படத்திலிருந்து ‘நாட் ராமையா வஸ்தாவையா’ பாடல் வெளியானது

 ஜவான் படத்திலிருந்து ‘நாட் ராமையா வஸ்தாவையா’  பாடல் வெளியானது
Shah Rukh Khan
Shah Rukh Khan

சமீபத்திய #AskSRK அமர்வு,  ஷாருக்கானின் தீவிர ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, கிங்கான் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும்  திரைப்படமான “ஜவான்” படத்தின் அடுத்த பாடலின் டீசரை தயாரிப்பாளர்கள் சார்பில்  வெளியிட்டார். பெரும் காத்திருப்பிற்கு பிறகு தற்போது , ‘ நாட்  ராமையா வஸ்தாவையா  ‘ பாடல் வெளியாகி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஜவான் படத்திலிருந்து வெளியாகியுள்ள ‘நாட் ராமையா வஸ்தாவையா பாடல்,  பார்ட்டிக்கு அட்டகாசமான பாடலாக அமைந்துள்ளது. SRK இன் மாயாஜால வசீகரம் பாடலை அழகாக்குகிறது. இளம் தலைமுறையினர் விரும்பும் வகையில்  பாடலில்  ட்ரெண்ட்செட்டர் நடன அசைவுகள் இடம் பெற்றிருக்கிறது.  மேலும், மூன்று வெவ்வேறு மொழிகளில் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.பாடலின் இந்தி பதிப்பில், “நாட் ராமையா வஸ்தாவையா” என்ற பாடல் வரிகளை  சமீபத்தில் பல வெற்றிப்பாடல்களை தந்த, மிக பிரபலமான பாடலாசிரியர் குமார்  எழுதியுள்ளார். அனிருத் ரவிச்சந்தர், விஷால் தத்லானி மற்றும் ஷில்பா ராவ் ஆகிய திறமையான இசை கலைஞர்கள் இப்பாடலுக்கு குரல் கொடுத்துள்ளனர், வைபவி மெர்ச்சன்ட் அழகாக நடனம் அமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஆஸ்கார் விருது பெற்ற, புகழ்மிக்க பாடலாசிரியர் சந்திரபோஸ் தெலுங்கு பாடலை எழுதியுள்ளார். ஸ்ரீராம சந்திரா, ரக்ஷிதா சுரேஷ் மற்றும் அனிருத் ரவிச்சந்தர்  தெலுங்குப்பதிப்பை பாடியுள்ளனர்.
and also :வெங்கடேஸ்வர சுவாமிக்கு முன் வராஹஸ்வாமி தரிசனம்.

மேலும், “நாட்  ராமையா வஸ்தாவையா” என்று ஆரம்பிக்கும் தமிழ் பதிப்பிற்கு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை பிரபலமான பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். அனிருத் ரவிச்சந்தர், ஸ்ரீராம சந்திரா மற்றும் ரக்ஷிதா சுரேஷ் ஆகியோர் தங்களின் வசீகரமான குரல்களில் பாடியுள்ளனர்.  இந்த பாடலுக்கு வைபவி மெர்ச்சன்ட் அழகாக நடனம் அமைத்துள்ளார்.“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours