சமத்துவம் குறித்தும் தொடர்ந்து பேசுவோம் – அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர் சந்திப்பு

Estimated read time 1 min read
Spread the love

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர் சந்திப்பு

துறையின் சார்பில் ஆட்சி பொறுப்பேற்ற 28 மாதங்களில் 1030 திருக்கோயிலில் நன்னீராட்டு விழா நடந்தது. அதில்2022-23, 2023-24 ஆகிய இரண்டு ஆண்டில் 930 கட்டணமில்லா திருமணங்களை , வசதி இல்லாதவர்களுக்கு நடத்தி வைக்கப்பட்டதுமுன்னோர்கள் விட்டு சென்ற பொக்கிஷமான 1000 ஆண்டுகளுக்கு மேலான கோயில்களில் புனரமைப்பு பணிக்காக 2022-23 ஆண்டுகளில் 100 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கியது. அதில் 143 திருக்கோயில் புனரமைப்பு பணிக்காக எடுக்கப்பட்டு  140 கோடி ரூபாய் செலவில் குடமுழுக்கு திருப்பணிகள் நடத்தப்பட்டது.  2023-24 நிதி ஆண்டில் முதலமைச்சர் மேலும் 100 கோடி ரூபாயை மானியமாக வழங்குவதாக அறிவித்து  87 திருக்கோயிலில் 160 கோடி செலவில் திருக்கோயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் , அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத் துறைக்கு இவ்வளவு பெரிய நிதி வழங்கப்பட்டது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தான் என்று கூறினார்.இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் ஒருகால பூஜை திட்டத்திலே இருக்கிற 12,957 திருக்கோயில்களுக்கு, 1 லட்சமாக இருந்த வைப்பு நிதியை 2 லட்சமாக உயர்த்தியது தமிழக முதலமைச்சர் தான்.அதற்கான 129.50 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கியது இந்த ஆட்சி.

2022-23 ஆண்டில் மேலும் 2000 திருக்கோயில்களுக்கு 40 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கியதாகவும், இந்த ஆண்டு மேலும் 2 ஆயிரம் கோயில்களை ஒரு கால பூஜை திட்டத்தில் எடுத்து கொண்டு அரசு நிதியாக 30 கோடியும், ஆணையர் பொது நலத்தில் இருந்து 10 கோடியும் என மொத்தம் 40 கோடி வழங்கி  இதுவரை 16,957 கோயில்களுக்கு ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் தெய்வத்துக்கான ஒரு கால பூஜையாவது நடைபெறும் நல்ல சூழலை உருவாக்கியதாகவும், திருக்கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு எந்தவொரு முன்னுரிமையும் இல்லாததை தொடர்ந்து அனைத்து அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கி இதுவரை12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அர்ச்சகர்களும் 1000 ரூபாய் உதவி தொகை வழங்கும் ஆட்சி இந்த ஆட்சி.அந்த வகையில் இன்றைக்கு பயிற்சி பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி பெற்ற அர்ச்சகர்களும் 94 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அந்த 94 பேரில் 3 பேர் பெண்கள். அத்துடன் ஓதுவார் பயிற்சி பெற்ற 4 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி முடித்த 71 பேருக்கு தற்காலிகமாக திருக்கோயிலில் தலைமை அர்ச்சகரிடம் உதவி அர்ச்சகராக சேர விண்ணப்பித்ததாகவும் அனைத்தும் சேர்ந்து கிட்டத்தட்ட 167 பேர் உதவி அர்ச்சகராக சேர்ந்து மாதம் அவர்களுக்கு 8000 முதல் 10000 ரூபாய் உதவி தொகையாக வழங்கி வருவதாகவும் , இந்த ஆட்சி சமத்துவ சமதர்ம ஆட்சி.இதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கோட்பாட்டின் கீழ் , இந்த பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் கோயில்களில் மந்திரங்கள் செல்லும் போது பெரியார், கலைஞர் அண்ணா, முதலமைச்சரின் கனவுகள், சமூக நீதி பாதுகாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆண்டு 111 பேர் அர்ச்சகர் பள்ளியில் அர்ச்சகராக விண்ணப்பித்ததாகவும், மொத்தம் 20 பயிற்சி பள்ளிகள் இருக்கிறது. 6 பயிற்சி பள்ளிகள் மூடியிருந்ததை கண்டு அந்த பயிற்சி பள்ளிகளில் வகுப்புகள் நடக்கும் சூழல் அமைந்துள்ளது என்றும் புதிதாக அர்ச்சகர் நியமனத்துக்கு விளம்பரப்படுத்தி உள்ளதாகவும் கூறினார்.1000 க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் எத்தனை கோயில்களுக்கு முதலமைச்சர் சென்றதாக தமிழிசை சௌந்தரராஜன் பேசியது குறித்த கேள்விக்கு, அவர் தெலுங்கானாவுக்கும் புதுச்சேரிக்கும் தான் ஆளுநரே தவிர, தமிழக பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளர் அல்ல. இதை கேட்கின்ற தார்மீக உரிமை அவருக்கு இல்லை.அவர் சார்ந்து இருக்கின்ற/ ஆளுநராக இருக்கின்ற மாநிலங்களில் இது போன்ற கும்பாபிஷேக நடவடிக்கையை முன்னெடுத்தால் இது போன்ற கேள்விகளை கேட்பதற்கு தகுதி உடையவர்களாக நினைக்கலாம்.போகிற போக்கில் ஏதாவது சிண்டு முடிஞ்சு வைக்கும் வேலையை புதுச்சேரியிலும் தெலுங்கானாவிலும் வைத்துக் கொள்ள கேட்டு கொள்கிறேன் என்று கூறினார்.அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்  திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று கோயிலுக்கு சென்று பணியை செய்யும் போது எந்தவித பிரச்சனைக்கு அவர்கள் உள்ளானாலும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். என் மண், என் மக்கள் ஈடுபடவில்லை அதற்காக ஏதாவது பிரச்சனையை பாஜக கையில் எடுக்கிறார்கள்.

சமத்துவத்தைப் பற்றி திமுக தொடர்ந்து பேசும். சனாதனத்தை பற்றி பேச அனைத்து அமைச்சர்களுக்கும் உரிமை உண்டு.
சமாதானம் குறித்தும் சமத்துவம் குறித்தும் தொடர்ந்து பேசுவோம்.ஆர்ப்பாட்டம், போராட்டம் இவற்றின் மூலம் எங்களை அச்சுறுத்த முடியாது என்றும், இது சமத்துவமான ஆட்சி. அனைத்து அமைச்சர்களுக்கும் சமத்துவம் பற்றி பேசும் உரிமை உண்டு. இது போன்ற போராட்டத்தை 45 ஆண்டாக சந்தித்து வருகிறேன்.உருட்டல் மிரட்டலுக்கு பயந்து எங்கள் பணிகளை செய்யாமல் இருக்க மாட்டோம் என்றும், துறையின் செயல் முதலமைச்சரின் ஆணை.  திருக்கோயில்களில் மழைநீர் சேகரிப்பு வசதி கட்டமைக்கப்பட்டு உள்ளது. இணை ஆணையருக்கு இது தொடர்பாக உத்தரவிட்டது என்றும்,  முதலமைச்சரை பொறுத்தவரை 45 க்கும் மேற்பட்ட இந்து சமய அறநிலையத் துறை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் என்று கூறினார்.அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்  திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று கோயிலுக்கு சென்று பணியை செய்யும் போது எந்தவித பிரச்சனைக்கு அவர்கள் உள்ளானாலும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours