
school
ஒசூர் அருகே முதலமைச்சரால் காணொளி மூலம் திறப்பு விழா கண்ட புதிய பள்ளி கட்டிடத்தில் மூன்றாவது முறையாக பெயர்ந்து விழுந்த மேல்தள கான்கிரிட்டால் மாணவர்கள் அச்சம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேகேப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது
போதுமான வகுப்பறைகள் இல்லை என்பதால் புதிய வகுப்பறை கட்டிடம் அமைக்க 1கோடியே 1லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது..
6வகுப்பறைகளை கொண்ட பள்ளி கட்டிடத்தினை கடந்த செப்டம்பர் 26ம் தேதி த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பள்ளி திறந்த ஒரு வாரத்திலேயே வகுப்பறைக்குள் சீலிங் கான்கிரிட் பெயர்ந்து விழுந்தது.. அதனை தொடர்ந்து பள்ளி வகுப்பறைக்கு வெளியிலும் வரண்டாவில் உள்ள சீலிங் பெயர்ந்து விழுந்ததால் மாணவர்கள்,பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்ப்படுத்தியிருந்த நிலையில்
திறப்பு விழாவினை கண்டு 20 நாட்களே ஆன நிலையில் இன்று மூன்றாவது முறையாக பள்ளி கட்டிடத்தின் சீலிங் கான்கிரிட் உதிர்ந்து விழுந்ததால் மாணவர்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.
ஓவிய போட்டியினை பள்ளி வராண்டாவில் ஆசிரியர்கள் நடத்தி வந்த நிலையில், 3×3 அடி அளவில் கான்கிரிட் விழுந்ததால் அந்த சமயத்தில் யாரும் அங்கு இல்லாததால் நல்வாய்ப்பாக மாணவர்களுக்கு எவ்வித காயமின்றி தப்பினர்
இதுக்குறித்து கவுன்சிலர் முரளி கூறுகையில்:
தமிழக முதலமைச்சர் திறந்து வைத்த பள்ளி கட்டிடத்தை ஒசூர் திமுக எம்எல்ஏவும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான Y.பிரகாஷ் அவர்களின் நெருங்கிய உறவினரின் கற்பக விநாயகர் என்கிற ஒப்பந்த நிறுவனம் கட்டி முடித்துள்ளது, திறப்பு விழா கண்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே சீலிங் கான்கிரிட் பெயர்ந்து விழுவதால் தரமற்றதாக பள்ளி கட்டிடம் உள்ளது.. எனவே புதிய கட்டிடத்தை அமைத்து தர கோரிக்கை விடுத்தார்