Home featured எஸ்.பி.வேலுமணி வங்கி லாக்கரில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை..!

எஸ்.பி.வேலுமணி வங்கி லாக்கரில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை..!

4 min read
0
0
46
Sp Velumani
20 / 100 SEO Score

கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதி எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 60 இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். வேலுமணி வீட்டில் நடந்த 11 மணி நேர சோதனையில், வங்கி பாதுகாப்பு பெட்டக சாவி கைப்பற்றப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 810 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு செய்ததாக 2018 ம் ஆண்டில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதியன்று எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய கோவையில் 42 இடங்கள், சென்னையில் 16 இடங்கள், காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் ஒரு இடங்கள் என மொத்தம் 60 இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். எஸ்.பி.வேலுமணியின் சகோதாரர் அன்பரசன் வீடு, கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குநர் சந்திர பிரகாஷ் வீடு, வடவள்ளி பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சந்திரசேகர் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

Sp Velumani
Sp Velumani

இதில் 13 இலட்ச ரூபாய் பணம்,  2 கோடி ரூபாய்க்கான வைப்புத்தொகை, முக்கிய ஆவணங்கள், பத்திரங்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. முதல் தகவல் அறிக்கையில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கே.சி.பி. இன்ஜினியரிங் நிறுவனத்தில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் இரண்டு நாட்கள் சோதனை நடத்தினர். அதிகளவிலான டெண்டர்கள் விதிமுறைகளை மீறி முறைகேடாக இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாகவும், எஸ்.பி.வேலுமணி அதிகார துஷ்ப்ரயோகம் செய்து இந்நிறுவனத்திற்கு டெண்டர்களை வழங்கியதாக புகார் அளிக்கப்பட்டு இருந்தது.கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதியன்று இலஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். காலை 6.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 10 அதிகாரிகள் குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். எஸ்.பி. வேலுமணி வீட்டில் நடந்த 11 மணி நேர சோதனையில், வங்கி பாதுகாப்பு பெட்டக சாவி கைப்பற்றப்பட்டது. இந்த சாவியை இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

Load More Related Articles
Load More By admin
Load More In featured

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

If you were a Saint for the Orthodox chapel, you wouldn’t have to wed any person

If you were a Saint for the Orthodox chapel, you wouldn’t have to wed any person I&#…