
s j surya3
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ இன்னும் சரியாக ஒரு மாதத்தில் தீபாவளி வெளியீடாக உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் முதல் பாடல் வெளியீடும் பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னை சத்யம் சினிமாசில் இன்று நடைபெற்றது.
நடிகர் மற்றும் இயக்குநர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் உங்களிடம் ஒப்படைக்கிறோம். எல்லைகளை
தாண்டி ரசிகர்களை சென்றடையும் விஷயம் இப்படத்தில் உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் படம் எந்த அளவு எதிர்பார்ப்புகளை உருவாக்கும் என்று நான் பார்த்துள்ளேன். அதிகம் பேசாத சந்தோஷ் நாராயணன் அவர்களே இந்த மேடையில் நிறைய பேசியுள்ளார். இந்த படம் அவ்வளவு பேச வைத்துள்ளது. லாரன்ஸ் சார் நல்ல மனிதர். இந்த படத்தில் அவருடன் பணியாற்றியது ரொம்ப சந்தோஷம். கார்த்திக் சுப்பராஜ் சார் படைப்பும் காட்சிகளும் அப்படி இருக்கும். இறைவன் நல்ல நல்ல படைப்புகளை என்னை நோக்கி அனுப்பி வைக்கிறார். நான் இங்கு ஒரு நல்ல நடிகனா இருப்பதற்கு ‘இறைவி’ படம் மிகப்பெரிய காரணம். அதற்காக கார்த்திக் சுப்பராஜ் சார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நிறைய பேச வேண்டியது இருக்கிறது. கண்டிப்பாக பேசுவோம். இந்த படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் (ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்) பேசியதாவது…
‘ஜிகர்தாண்டா 1’ தேசிய விருது வாங்கியது. ‘ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ்’-ம் நேஷனல் அவார்ட் வாங்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. எடிட்டிங், இசை எல்லாம் நன்றாக அமைந்துள்ளது. என்னுடைய ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் இல்லாமல் நான் இல்லை. எங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி.