‘ரெட் சாண்டல் வுட்’ தேசிய விருது வாங்கும் – பேரரசு உறுதி

Estimated read time 1 min read
Spread the love

மக்கள் வலியை பிரதிபலிக்கும் ‘ரெட் சாண்டல் வுட்’ தேசிய விருது வாங்கும் : பேரரசு உறுதி 

ஜெ.என்.சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் ஜெ.பார்த்தசாரதி தயாரிப்பில் குரு ராமானுஜம் இயக்கியுள்ள படம் ‘ரெட் சாண்டல் வுட்’. செம்மரம் கடத்தியதாக சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களின் வாழ்வையும் வலியையும் கதையாக கொண்டு  சினிமாவாகியிருக்கும் உண்மை சம்பவமே ‘ரெட் சாண்டல் வுட்’.

red sandle wood
red sandle wood

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசியதாவது :-

”தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தன் குடும்பத்திற்காக செம்மரம் வெட்டச்சென்று தன்னையே தியாகம் செய்யும் குடும்பத்தலைவனாக இந்தப்படத்தில் நடித்திருக்கிறேன். இதில் நடித்தபோது.  இருப்போமா இல்லையா என்று கூட யோசித்தது உண்டு. அந்த அளவுக்கு உயிரை பணயம் வைத்து வேலை செய்ய வேண்டியிருந்தது. ஒருநாள் இரவில் காட்டில் ஷூட்டிங் நடந்தபோது வன அதிகாரி ஒருவர் என்னிடம் வந்து ஷூட்டிங் எப்போது முடியும் என்று கேட்டார். இன்னும் ஆரம்பிக்கவே இல்லை இப்படி கேட்குறீங்களே என்று கேட்டேன். அதற்கு அவர், “இல்ல சார் இது யானைகள் நடமாடும் இடம். பக்கத்தில்தான் 20 யானைகள் இருக்கிறது” என்றார். எனக்கு பயம் வந்துவிட்டது. இருந்தாலும் யாரிடமும் சொல்லாமல் வேண்டாத தெய்வங்களையும் வேண்டிக்கொண்டிருந்தேன். அப்படி கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்” 
இயக்குனர் பேரரசு பேசியதாவது :-

“எம்.எஸ்.பாஸ்கர் சார் என் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இந்தப்படத்தில் அவர் வேறொரு அவதாரம் எடுத்துள்ளார். டிரைலரை பார்த்துவிட்டு மனது இறுகிப்போனது. தமிழன் எந்தப்பக்கம் போனாலும் பிரச்சனைதான். காரணமின்றி தாக்கப்படுவார்கள்; தண்டிக்கப்படுவார்கள். ஆனால் பின்னணியில் யாரோ இருப்பார்கள்.. அப்பாவி தமிழன்தான் அநியாயமாக பாதிக்கப்படுவான். இப்போது இரண்டு வகையான படங்கள்தான் வெற்றி பெருகின்றன. ஒன்று பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள். இன்னொன்று உயிரோட்டமான மக்களின் வலையை பிரதிபலிக்கக்கூடிய படங்கள் ஓடுகின்றன. நல்ல படங்கள் ஓடும். ‘தேசிய விருது பெற்ற ‘கடைசி விவசாயி’ நல்ல படம். அதேபோல் ‘ரெட் சாண்டல் வுட்’ படமும் நல்ல படம். இந்த படமும் தேசி விருது வாங்கும் என்று வாழ்த்துகிறேன்” 

இயக்குனர் வி.இசட். துரை பேசியபோது,”இந்த மாதிரி கதை எடுக்க; தயாரிக்க ஒரு தைரியம் வேணும். அதற்காக இயக்குனரையும் தயாரிப்பாளரையும் பாராட்டுகிறேன். நாயகன் வெற்றி, என் மனசுக்கு நெருக்கமானவர். இந்த படம் அனைவரும் பாராட்டும் படமாக வரும் என்பதில் சந்தேகமில்லை”என்றார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours