கதாநாயகன் வெற்றி பேசியபோது :

“ இயக்குனர் இந்த கதையை சொன்னபோது இது உண்மை சம்பவம் என்று பல சம்பவங்களை சொன்னார். பல வருடங்களுக்கு முன்பு கிராமங்களில் குழந்தைகளுக்கு விளையாட கொடுக்கும் மரப்பாச்சி மொம்மைகள் செம்மர மரத்தில்தான் செய்வார்களாம். அதில் புற்று நோயை தீர்க்ககூடிய மருந்து உள்ளது. ஆனால் இன்று அதை ஏற்றுமதி செய்துவிட்டு சீனாவில் இருந்து பிளாஸ்டிக் பொம்மைகளை இறக்குமதி செய்கிறோம். இது சமுதாயத்தில் எல்லோரும் பார்க்கவேண்டிய படம்.” என்றார்.
படத்தின் இயக்குனர் குரு ராமானுஜம் பேசியதாவது :-
“2015 ஆண்டு நடந்த உண்மை சம்பவமே இந்தப்படம். என்னை பாதித்த உண்மை சம்பவத்திற்கு எதிரா

ககுரல் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். எனது வலி, வேதனை திரைக்கதையாக மாறியது. இந்தக் கதையை எப்படி பண்ணப்போறோம், எந்த நடிகர்களை வைத்து எடுக்கப்போறோம்; எந்த லொகேஷன்களின் படமாக்கப்போறோம் என்பதில் உறுதியாக இருந்தேன். தலைக்கோணம், ரேணிகுண்டா என்று பெரும்பகுதி காடுகளில்தான் எடுத்தோம். அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கவே கஷ்டமாக இருந்தது. நிறைய பிரச்சனைகளை சந்தித்துதான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். கடைசிவரை எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளருக்கு என் நன்றிகள்.
+ There are no comments
Add yours