ஜெ.என்.சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் ஜெ.பார்த்தசாரதி தயாரிப்பில் குரு ராமானுஜம் இயக்கியுள்ள படம் ‘ரெட் சாண்டல் வுட்’. செம்மரம் கடத்தியதாக சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களின் வாழ்வையும் வலியையும் கதையாக கொண்டு சினிமாவாகியிருக்கும் உண்மை சம்பவமே ‘ரெட் சாண்டல் வுட்’.

வணிகர் சங்கத்தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடந்த விழாவில் தயாரிப்பாளர் பார்த்தசாரதி அனைவரையும் வரவேற்று பேசினார். அப்போது அவர், “நான் முதன் முதலாக தயாரித்திருக்கும் படம் இது. துயர சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் நன்றாக வந்துள்ளது. இதை வெற்றிபெறச்செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்”என்றார்.
வணிகர் சங்க சென்னை மாவட்ட தலைவரும் தயாரிப்பாளர் பார்த்தசாரதியின் தந்தையுமான ஜெயபால் பேசியபோது,
“ இது புஷ்பா படத்திற்குமுன்பே எடுத்திருக்கவேண்டிய படம். சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்த படத்தை உயிரை கொடுத்து எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தை பார்த்துவிட்டு கமர்ஷியலாக ‘காவாலா..’ பாட்டு போல ஒரு பாடலை சேர்க்கச் சொன்னேன்.ஆனால் இந்த கதைக்கு அது தேவையற்றது. இந்தப்படத்தை இப்படித்தான் எடுக்கவேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்தார். இந்த படத்திற்கு எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு, இதயம் போல இருந்து உயிரை கொடுத்திருக்கிறது”என்றார்.
வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா பேசியதாவது:-
“வணிக குடும்பத்தை சார்ந்த ஒருவர் இந்தப்படத்தை எடுத்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரின் தந்தை ஒரு மர வியாபாரி. அவருக்கு மரத்தை பற்றி நன்றாகவே தெரியும். எனவே மரம் சம்பந்தப்பட்ட இந்த படத்தை நன்றாகவே எடுத்திருப்பார்கள். படம் பற்றி இங்கு பேசியவர்களின் பேச்சை கேட்டபோது உருக்கமாக இருந்தது. இளைஞர்களை சுட்டுக்கொன்ற செய்தியே வலியை கொடுத்தது. இயக்குனர் குரு ராமானுஜம் பார்ப்பதற்கு சிறியவர் போல் இருந்தாலும் வைரமான வலிமையான ஆளாக இருக்கிறார்.
இந்தப்படத்தை வியாபார நோக்கத்திற்காக எடுக்காமல் நாளை இதுபோன்ற சம்பவம் சமூகத்தில் நடக்கக்கூடாது என்ற அக்கறையில் எடுத்திருக்கிறார்கள். ஆனால் வியாபார ரீதியாகவும் இந்தப்படம் வெற்றிபெற வேண்டும். அப்போதுதான் தயாரிப்பாளர் அடுத்த படத்தை எடுக்க முன்வருவார். லட்சியத்துடன் படம் எடுத்த இவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இந்தப்படம் வெற்றிபெற வணிகர் சங்கத்தை சார்ந்தவர்கள் துணை நிற்பார்கள்”
and also : விநாயகரை வழிபட்டால் தடைகள் வராது
இறுதியாக விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன் பேசியபோது, “சினிமா ஒற்றுமை, கட்டுப்பாடுகள் இல்லாத தொழில். கார்பரேட் கம்பெனிகள்தான் இப்போது படம் தயாரிக்கிறது. சிறுபட தயாரிப்பாளர்கள் அழிந்துவிட்டார்கள். தயாரிப்பாளர்களுக்கு அடையாளம் இல்லை; அட்ரஸ் இல்லை. இங்கு கட்டுப்பாடுகள் இருந்தால் சினிமா மிகச்சிறந்த தொழில். இந்தப்படத்தின் டிரைலர் அற்புதமாக இருந்தது. வெற்றி பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் இந்தப் படத்தில் இருக்கிறது. படம் வெற்றிபெற எனது வாழ்த்துகள்”என்றார்.
+ There are no comments
Add yours