‘ரெட் சாண்டல் வுட்’ – செப்டம்பர் 8 ம் தேதி வெளியாகிறது
நல்ல கதைகளையும், வித்தியாசமான கதைகளையும் தேர்வு செய்து நடிக்கும் வெற்றி கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் மனதை நெகிழ்வாக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் கணேஷ் வெங்கட்ராம், ‘கேஜிஎஃப்’ புகழ் ராம், கபாலி விஷ்வா மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து பேசியதாவது:-

“இந்த நூற்றாண்டில் இலங்கை தமிழர் பிரச்சனைக்குப் பிறகு நம் காதுகளில் கேட்ட மரண ஓலம் செம்மர கடத்தல் பிரச்சனையில் நடந்த இரக்கமற்ற கொலைகள்தான். வெள்ளம் வந்து, மழை வந்து, சுனாமி வந்து, கொரோனா வந்து செத்துப்போனார்கள். ஆனால் மரம் வெட்ட போனவர்கள் செத்துப்போன அவலம், மனிதனை மனிதனே சுட்டுக்கொன்ற கொடூரத்தை இந்தப்படம் பதிவு செய்துள்ளது. லாபத்தை கணக்குப்பார்த்து கதை பண்ணாமல் இந்தப்படத்தை எடுத்திருக்கும் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் எனது பாராட்டுகள்”
இயக்குனர் ஆர்.வி.உதயக்குமார் பேசியதாவது:-
“இந்தப்படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு மனசு கஷ்டமானது. எத்தனையோ இளைஞர்கள் படிப்பறிவு இல்லாமல் வேலைக்கு போக நாதியில்லாமல் எங்கெங்கோ தவறாக மாட்டிக்கொண்டு தங்களை மாய்த்துக்கொள்கிறார்கள்.இந்தமா திரி உண்மை நிகழ்வை படமாக்கிய இயக்குனர் குரு ராமானுஜம் மற்றும் தயாரிப்பாளர் பார்த்தசாரதிக்கு எனது வாழ்த்துகள். ஒவ்வொரு ஷாட்டும் பிரமாதமாக இருந்தது. இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு எல்லாமே சிறப்பாக இருந்தது. இந்தப்படத்தை எடுக்க ஒரு தைரியம் வேண்டும். இந்தப்படத்தை பத்திரிகை, ஊடக நண்பர்கள் மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கவேண்டும்.”

and also : பச்சைக் காய்கறிகளில் ஊட்டச்சத்து அடங்கியுள்ளது
நடிகர் கணேஷ் வெங்கட்ராம் பேசியபோது,
“இந்த கதையை கேட்ட ஐந்தாவது நிமிடமே படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டேன். செம்மரம் நம் பாரம்பரிய சொத்து. இதுபற்றி இந்ததலைமுறை தெரிந்துகொள்ள வேண்டும். நிறைய ஆய்வு செய்து இயக்குனர் இந்த கதையை எழுதியிருக்கிறார். படத்தின் நாயகன் வெற்றி நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பவர். அவருடன் சேர்ந்து நடிப்பதற்கு இந்த படம் நல்ல வாய்ப்பாக இருந்தது. எம்.எஸ்.பாஸ்கர் சார் இதில் வேற லெவல் நடிப்பை கொடுத்திருக்கிறார். நான் வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக வருகிறேன். இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் மக்கள் மனதை இந்த கதை ஏதோ பண்ணும். அப்படி ஒரு படம் இது”என்றார்.
+ There are no comments
Add yours