ரங்கோலி”  திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

Estimated read time 1 min read
Spread the love

Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்கள் ஹமரேஷ் பிரார்த்தனா நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”.  செப்டம்பர் 1 அன்று திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்..எடிட்டர் சத்ய நாராயணன் பேசியதாவது…
பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. முதலில் விஜய் சாருக்கு நன்றி. முதலில் திரைக்கு வந்து அவருடன் தான் வேலை பார்த்தேன். தயாரிப்பாளர்களுக்கு நன்றி. வாலி மோகன் தாஸ் என் நண்பர், அவர் தந்த வாய்ப்புக்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது பார்த்து ரசித்து ஆதரவு தாருங்கள் நன்றி.

கலை இயக்குநர் ஆனந்த் மணி பேசியதாவது…இது என் 15 வது படம். வாலி மோகன் தாஸ் என் ஃபிரண்ட், இந்த சூழ்நிலை வாய்ப்பிற்காக அவருக்கு நன்றி. எங்கள் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்த மேடைக்காக ஏங்கியிருக்கிறோம். இப்போது கிடைத்திருப்பது மகிழ்ச்சி.இசையமைப்பாளர் சுந்தர மூர்த்தி பேசியதாவது,
எங்கள் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர் வாலிக்கும் நன்றி. இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டதும் அவர் கூறிய வார்த்தைகள் எனக்கு உந்துதலாக இருந்தது. படம் ஒரு மன நிறைவை அளிக்கும். இப்படத்தில் பணியாற்றிய பாடலாசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளர் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாகக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். இயக்குநரின் உதவியாளர்கள் அனைவரும் கடின உழைப்பை தந்துள்ளார்கள். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

பாடலாசிரியர் வேல்முருகன் பேசியதாவது,
இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் வாலி அவர்களுக்கு நன்றி. நான் இந்தப் படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளேன். இந்தப் படத்தில் வரும் பாடல்கள் அர்த்தமுள்ளதாக இருக்கும். விளையாட்டாக இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்தை இந்த படம் கூறும். எனக்கு வாய்ப்பளித்ததற்கு  நன்றி.பாடலாசிரியர் கார்த்திக் மேத்தா பேசியதாவது,
இந்த மேடையைப் பாடலாசிரியர் வேல்முருகன் அவர்களுடன் பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் அறிமுகமாகும் அனைவருக்கும் வாழ்த்துகள். குறிப்பாகக் கதாநாயகன் ஹமரேஷ் அவருக்கு வாழ்த்துக்கள். பாடல்கள் அனைத்தும் அற்புதமாக வந்துள்ளது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 

ஆடுகளம் முருகதாஸ் பேசியதாவது…
இந்த ரங்கோலியில் வாய்ப்பு கிடைத்ததே மிக சந்தோஷம். ஹமரேஷ் இவ்வளவு படம் பண்ணியிருக்கிறான் என்பதே இப்போது தான் தெரிகிறது. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சின்ன தனுஷ் அவர். அவருக்கு வாழ்த்துக்கள். படம் நன்றாக வந்துள்ளதுஇயக்குநர் பொன்ராம் பேசியதாவது…
இந்தப்படம் பார்த்துவிட்டேன், மிக அற்புதமாக இருக்கிறது. இயக்குநர் முதல் டீம் மொத்தமும் அட்டகாசமாக உழைத்துள்ளனர். ஹமரேஷ் அட்டகாசமாக நடித்துள்ளார், புதுமுகம் மாதிரி தெரியவில்லை. ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் இருவரும் படத்தைத் தாங்கியுள்ளனர். ஹமரேஷ் மிகப்பெரிய இடத்திற்கு வருவார். ஸ்கூல் பசங்களா நடித்தவர்களும் நன்றாகச் நடித்துள்ளனர். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

எழுத்தாளர் அஜயன் பாலா பேசியதாவது..
கேலக்ஸி என்றால் நட்சத்திர கூட்டம் என அர்த்தம். தமிழ் சினிமாவில் சிவகுமார் ஃபேமிலி, எடிட்டர் மோகன் ஃபேமிலி என கேலக்ஸி இருக்கிறது. அது போல் அழகப்பன் விஜய் ஃபேமிலி ஒரு கேலக்ஸி, அவர்களோடு நானும் இணைந்து இருக்கிறேன். இந்தப்படம் எனக்கு முக்கியமான படம். இந்தப்படம் இன்றைய மிக முக்கியமான பிரச்சனையை பேசுகிறது. கல்வியில் இருக்கும் பெரிய பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசுகிறது. ஹமரேஷ் மிக நன்றாக நடித்திருக்கிறார். படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது..
வருகை புரிந்த மூத்த இயக்குநர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. ன்னை நம்பி வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. என்னுடன் இணைந்து உழைத்த உதவியாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இசையமைப்பாளருடன் வேலை பார்த்தது இனிமையான அனுபவம். எல்லோரும் தங்கள் படம் போல் நினைத்து உழைத்தார்கள். ஹமரேஷை வஸந்த் சார் படத்திலிருந்து பார்த்து வருகிறேன் மிக அற்புதமான கலைஞன். எதையும் புரிந்து கொள்ளும் தன்மை அவருக்கு அதிகம். முருகதாஸ் அண்ணனிடம் கதை சொன்ன போது அவருக்கு ஆச்சரியம், நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்றார். எப்போது டேட் கேட்டாலும் ஓடி வந்துவிடுவார். மேலும் என்னை நம்பிய இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. உங்களுக்குப் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன் அனைவருக்கும் நன்றி.

 

தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன் பேசியதாவது..,
இன்று என் வாழ்நாளில் எனக்கு முக்கியமான நாள். என் பேரன் இன்று கதை நாயகனாக நடித்துள்ளான். நான் சினிமா துறைக்கு வந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் திரைத்துறையில் பல பணிகளைச் செய்த பிறகு தயாரிப்பாளராக அறிமுகமானேன். நான் என் குடும்பத்தில் அனைவரையும் படித்த பிறகுதான் சினிமாத்துறையில் கால் பதிக்க வேண்டும் என்று கூறுவேன், ஆனால் ஹமரேஷ் படிக்கும் போதே நடிகராகிவிட்டார். இந்தப் படத்தில் தமிழ் வாத்தியாராக நடித்தவர் அழகாக நடித்துள்ளார். இந்தப்படத்தில் அம்மா கதாபாத்திரம் நடித்த பெண்மணி சிறு பெண் தான் ஆனால் அந்தக் கதாபாத்திரத்தில் அருமையாகப் பொருந்தியுள்ளார். ஹமரேஷ் அருமையாக நடித்துள்ளார். கண்டிப்பாகப் படம் உங்களுக்குப் பிடிக்கும், நீங்கள்தான் இந்த படத்திற்கு ஆதரவு தந்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் நன்றி.இயக்குநர் விஜய் பேசியதாவது..
என் மருமகன் முழுக்க தமிழ் பேசியது அழகாக இருந்தது. 2005 மார்ச் மாசம் ஹமரேஷ் பிறந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. உண்மையான உழைப்பாளி, சினிமாவில் ஜெயிக்க எல்லா திறமையும் அவரிடம் இருக்கிறது. வாலி மோகன் தாஸ் நன்றாக இயக்கியுள்ளார். படத்தில் அனைவரும் நன்றாக உழைத்துள்ளனர். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.  இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது..,
தயாரிப்பாளர் சதீஷ் குமார் சாருக்கு ஒரு நல்ல நண்பர் மற்றும் இணை தயாரிப்பாளராக இருந்த பாபு ரெட்டி அவர்களுக்கு வாழ்த்துகள். தயாரிப்பாளர் அழகப்பன் மற்றும் இயக்குநர் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். கதாநாயகன் ஹமரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பெரும் கதாநாயகனாக வலம் வருவார். நான் படம் பார்க்க வேண்டிய வாய்ப்பு இருந்தது ஆனால் தவற விட்டுவிட்டேன். படத்தின் டிரெய்லரைப் பார்தேன் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்று தெரிகிறது. இயக்குநர் அழகாகப் படத்தை இயக்கியுள்ளார், ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் இருவரும் இணைந்து ஒரு அழகான காவியத்தைக் கொடுத்துள்ளனர். கண்டிப்பாகப் படம் வெற்றி பெறும் ஒட்டு மொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர்  பாக்யராஜ் பேசியதாவது..
இந்த படத்தைப் பலரும் பார்த்து விட்டனர் என்று கேட்டதும் என்னை ஏன் கூப்பிடவில்லை என்று ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படம் பலரது பள்ளிப் பருவத்தை ஞாபகப்படுத்த போகிறது. படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்து, அந்த கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளனர். எனக்கும் என் பள்ளிப் பருவம் ஞாபகம் வந்தது. கதாநாயகன் ஹமரேஷ் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும், வளர்ந்து வரும் நடிகர்களுக்கு அதுவே முக்கியம். இயக்குநர் வாலி மோகன் தாஸுக்கு என் வாழ்த்துக்கள். ஒரு நல்ல படத்தை அழகாக உருவாக்கியுள்ளீர்கள். ஏ எல் அழகப்பன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ஒட்டு மொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள், படம் கண்டிப்பாக வெற்றியடையும் நன்றி.

Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ்  இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி KS இசையமைத்துள்ளார். I.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். G.சத்யநாராயணன் எடிட்டிங் செய்துள்ளார். ஆனந்த் மணி கலை இயக்கம் செய்துள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours