Home featured ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவு; தமிழக அரசு 5 லட்சம் நிதியுதவி

ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவு; தமிழக அரசு 5 லட்சம் நிதியுதவி

4 min read
0
0
327
Raj TV cinematographer Velmurugan
70 / 100 SEO Score

ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவு; தமிழக அரசு 5 லட்சம் நிதியுதவி

ராஜ் தொலைக்காட்சியின் சென்னை தலைமை அலுவலத்தில் மூத்த ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவந்த வேல்முருகன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்று (சனிக்கிழமை) பலியாகியுள்ளார். அவருக்கு வயது 41.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

தமிழகத்தில் பல்வேறு பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணி புரிந்து வரும் 200-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் பலர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மேலும் சிலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இரண்டு வாரங்களாக மருத்துவமனயில் கொரோனாவுடன் போராடி வந்த ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன், கொரோனாவை வெல்லமுடியாமல் இன்று (சனிக்கிழமை)உயிரிழந்து விட்டார். வேல்முருகனின் மரணம் , தமிழக ஊடகத்துறையில் கொரோனாவிற்கு முதல் பலியாக அமைந்து விட்டது.

Raj TV cinematographer Velmurugan

அவரது மரணத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஊடகத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்களைப் போல் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளில் முன் களத்தில் நின்று பணியாற்றும் ஊடகத் துறையினரும் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் செயல்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொரோனாவிற்குப் பலியான ஒளிப்பதிவாளர் வேல்முருகனின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப் படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தற்போது ஒப்பந்த செவிலியராகப் பணியாற்றி வரும் வேல்முருகனின் மனைவி சண்முக சுந்தரிக்கு பணி நிரந்தரம் வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Load More Related Articles
Load More By admin
Load More In featured

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

This revolutionary concept can ‘unshackle’ poor folks from pay day loans and bad credit ratings

This revolutionary concept can ‘unshackle’ poor folks from pay day loans and bad credi…