சாதனை படைத்தார் அல்லு அர்ஜுன்

69-வது தேசிய விருதுகளின் வெற்றியாளர்களை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த விருது வழங்கும் விழாவில் தெலுங்கு படங்களும் தங்கள் அட்டகாசத்தை வெளிப்படுத்தின.தேசிய திரைப்பட விருதுகள் நாட்டின் திரைப்படங்களுக்கான மிகவும் மதிப்புமிக்க விருதுகளாகக் கருதப்படுகின்றன. ஆனால் 2021ம் ஆண்டுக்கான விருதுகள் பற்றிய அறிவிப்பு வந்துவிட்டது.
தெலுங்கு திரையுலகில் இருந்து சிறந்த தேசிய நடிகருக்கான விருதை வென்ற முதல் நடிகர் என்ற சாதனையை அல்லு அர்ஜுன் படைத்தார். 69 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு தெலுங்கு ஹீரோ சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். சிறந்த நடிகருக்கான விருதை புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜுன் பெற்றார்.சிறந்த நடிகர் – அல்லு அர்ஜுன் (புஸ்பா: தி ரைஸ்), சுகுமார் இயக்கத்தில் Icon star நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ள படம் புஷ்பா. சிறந்த நடிகருக்கான விருதை அல்லு அர்ஜுன் வென்றதால் அல்லுவின் வீட்டில் இப்போதே கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.
+ There are no comments
Add yours