“பிட்சா 3” இல் ஒலியின் திகில் வடிவம்

Estimated read time 1 min read
Spread the love

“பிட்சா 3” இல் ஒலியின் திகில் வடிவம்

PIZZA 3
PIZZA 3

சினிமா இசை சாம்ராஜ்யத்தில் மரபு இசைகளுக்கு சவால் விடும் அளவுக்கு புதிய கண்ணோட்டம் கொண்டவராக அருண் ராஜ் ஒளிர்கிறார். அவரது சமீபத்தய படைப்பான, அஸ்வின் காக்கமானு மற்றும் காளி வெங்கட் நடித்த “பிட்சா 3” இல் ஒலியை ஒரு மறக்கமுடியாத அனுபவமாக மாற்றும் வித்தை செய்துள்ளார்.200 வருடம் பழமையான உடைந்த பியானோவிலிருந்து பெருகும் இசைப் பிரவாகம்அருண் ராஜ் “பிட்சா 3” க்காக ஒரு விசித்திர இசைப் பயணத்தில், முற்றிலும் புதிய ஒலியின் தேடலைத் தொடங்கியுள்ளார். இந்தத் தேடல் அவரை நாட்டின் மிகப் பழமையான ‘மியூசி மியூசிகல்ஸ்’ என்ற கடைக்கு இட்டுச் சென்றுள்ளது. இங்குதான் அவர் அந்த 200 வருடம் பழமையான உடைந்த பியானோவைக் கண்டடைந்தார். மறக்கப்பட்ட அந்த அற்புத கருவிக்கு புத்துயிர் அளிக்க முடிவெடுத்தார். ஆனால் அந்தக் கருவி ஒலிப்பதிவு கூடத்துக்குள் நுழையாத அளவு பெரிதாக இருந்தது. அருண் ராஜும் அவரது குழுவும் அந்த பழமை வாய்ந்த பியானோவை பெரு முயற்சிக்குப் பிறகு ஒரு பெரிய வளாகத்திற்குக் கொண்டு வந்து, பல புதிய உத்திகளைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்தனர். அதன் பலனாக ஒலிகள் தனித்துவம் வாய்ந்த பல இசைக் கோர்வைகளாக வடிவெடுத்தன.அறியாதவற்றை இசைத்தல்அருண்ராஜின் இசைத் தேடல் பழமை வா

ய்ந்த இசைக்கருவியை கண்டு பிடித்ததோடு நில்லாமல் பாடகர் குழுவரை நீள்கிறது. முன்பின் அறிமுகம் இல்லாத, அதிலும் பெரிதாய் பாடிய அனுபவம் இல்லாத வெளிநாட்டு பாடகர்களை பாட வைத்தது அருண்ராஜின் பெரும் சாமர்த்தியம். குழுப்பாடல் பதிவிற்கு வழக்கித்திற்கு மாறான இந்த புதிய பாடகர்களின் சேர்க்கை தனித்துவம் வாய்ந்த இசையைக் கொண்டு வந்தது. ஓர் அமைதியற்ற பரிமாணமுடைய இந்த திகில் ஒலி படம் முழுதும் பயன்படுத்தப்பட்டது. இந்த ஒலி அடங்கிய பிறகும் திகிலின் சாரம் காதில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. இப்படத்தில் அருண் ஒரு பின்னணி இசைக்குழுவை வைத்து வித்தியாசமான பலவகை ஒலி தாக்கங்களையும் (sound effects) உருவாக்கியுள்ளார். அந்த ஒலி சுரங்களால் அறியப்பட்ட வழக்கமான மெல்லிசை குறிப்புகளுக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன.ஒரு தலைச்சிறந்த ஒலிப் படைப்பு
“பிட்சா 3” இல் அருண்ராஜின் பணி, இசையின் எல்லைகளை நகர்த்தி வைக்கிறது. வழக்கத்திற்கு மாறான கருவிகள், எதிர்பாராத அதிர்வுகள் மற்றும் ஒருங்கிணைக்கப்படாத பின்னணி இசைக்குழு ஆகியவற்றின் மூலம், அவர் திகில் சினிமாவின் ஒலி நிலப்பரப்பை மறுவரையறை செய்கிறார்.அருண் ராஜ் ஒரு முன்னணிப்படை இசையமைப்பாளராக தனது நற்பெயரை நிலைநாட்டுகிறார், தொடர்ந்து திரைப்பட இசையின் நிலப்பரப்பை மறுசீரமைப்பு செய்து கொண்டிருக்கிறார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours