‘நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா

எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் மூவரையும் அண்ணாவிடம் அறிமுகப் படுத்திய,திராவிட இயக்கங்களின் முன்னோடி, ‘நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா நேற்று தி.நகர் சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடந்தது.திருமதி.பாரதி திருமகன் வில்லிசை நடக்க.. தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகியது.
டி.கே.எஸ்.கலைவாணன் தொகுப்புரை வழங்க,ஜி.இராமகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்த,கி.வீரமணி விழாவுக்கு தலைமை தாங்க..,விஜயா தாயன்பன்,சி.பொன்னையன்,சைதை துரைசாமி,நல்லி குப்புசாமி செட்டி,நடிகை சச்சு,
இவர்கள் முன்னிலையில்..
நடிகமணி டி வி என் உருவ படத்தை, தி மு க செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் திறந்து வைத்தார்.டி வி என் வாழ்க்கை வரலாறு முதல் நூலை கி.வீரமணி வெளியிட,ஜி.விசுவநாதன் பெற்றுக் கொண்டார்.விழா மலரை.. இயல் இசை நாடக மன்றம் தலைவர் வாகை சந்திரசேகர் வெளியிட,முதல் பிரதியை, *தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் எம்.நாசர் *பெற்றுக் கொண்டார்.இரண்டாவது பிரதியை, தென்னிந்திய நடிகர் சங்கம் இணை தலைவர்* பூச்சி எஸ் முருகன் *பெற்றுக் கொண்டார்.
விடுதலை இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு, டிரஸ்கி மருதுஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.டி.வி.என்.விஜய் நன்றி கூற..நாட்டுப்பண் உடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
and also :பச்சை வாழைப்பழத்தால் மலச்சிக்கலை சரிபாருங்கள்
+ There are no comments
Add yours