“நீங்க நீங்களாவே இல்லை” – படப்பிடிப்பில் விஷாலுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் தந்த அதிர்ச்சி

Estimated read time 1 min read
Spread the love

“நீங்க நீங்களாவே இல்லை” – படப்பிடிப்பில் விஷாலுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் தந்த அதிர்ச்சி

Mark Antony
Mark Antony

மினி ஸ்டுடியோ சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி.“எல்லாத்தையும் மாத்தி மறந்து புது ஆளா மாறி வந்திருக்கேன்’ ; ஆதிக் ரவிச்சந்திரன்

இயக்குநர் ஆதிக் பேசும்போது, “நான் பழைய ஆதிக் ரவிச்சந்திரன் அல்ல..  இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா பேசுகின்ற “எல்லாத்தையும் மாத்தி மறந்து மாறி வந்திருக்கேன்” என்கிற வசனம் எனக்கே பொருந்துகிற வசனம் தான்.  படத்தில்  மோதலே கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும்.. அதை அடைய ஓடிக்கொண்டிருக்கும்போது ஏற்படும் சலசலப்பு தான் கதை.  இதில்  மையப்புள்ளியாக ஒரு தொலைபேசி இருக்கிறது. இந்த படப்பிடிப்பில்  விஷால் தனது கதாபாத்திரத்திற்கான மேக்கப்புடன் கேரவனில் இருந்து இறங்கியபோது  கிட்டத்தட்ட அங்கே கூடியிருந்த 500 பேரும் கைதட்டி வரவேற்றபோதே எங்களுக்கு படம் வெற்றி பெறும் என பாதி திருப்தி கிடைத்துவிட்டது. எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் பெரும்பாலான காட்சிகளில்  விஷால் தன்னை மறந்து  கைதட்டி விடுவார். கேட்டால் அருமையாக இருந்தது இன்னொரு டேக் எடு என்று கூறி விடுவார்” என்றார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours