கண்டிப்பாக இந்தப் படம் வெற்றியடையும், அப்போது என் மகனை பற்றி பேசுவேன் – இயக்குநர் இமயம் பாரதிராஜா

Estimated read time 1 min read
Spread the love

இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசியதாவது…என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். மேடையில் அமர்ந்திருக்கும் அத்தனை ஜாம்பவான்களுக்கும் நன்றி. நடிகனாக இருந்து இயக்குந‌ராக மாறுவது சுலபமில்லை, என் மகன் மீது நம்பிக்கை உள்ளது. டிரைலர் தான் காட்டியிருக்கிறான், மிக அற்புதமாக செய்துள்ளான். முக்கியமாக நான் நன்றி தெரிவிக்க வேண்டியவர் யார் என்றால் சுசீந்திரன் தான். காதலை அடிப்படையாக கொண்ட இந்த திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். அத்தனை இயக்குந‌ர்களும் என்னை அப்பா என்று தான் அழைத்தார்கள். மிகவும் மகழிச்சி. இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி, கண்டிப்பாக இந்தப் படம் வெற்றியடையும், அப்போது என் மகனை பற்றி பேசுவேன்.

MARGALI THIGAL (16)
MARGALI THIGAL (16)

பெப்சி தலைவரும் இயக்குநருமான‌ ஆர்.கே. செல்வமணி பேசியதாவது…மனோஜ் பாரதிராஜாவிற்கு வாய்ப்பளித்த சுசீந்திரனுக்கு நன்றி. பாரதிராஜாவிற்கு நன்றி. திறமையானவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து கிடைத்துள்ளது. ‘மார்கழி திங்கள்’ என்று அழகான தமிழ் டைட்டில். இதைப் பார்க்கும்போதே மனதுக்குள் சந்தோஷம். மண் வாசனை நிறைந்த படமாக இருக்கும் என்றும், பிரம்மாண்டமாக‌ இருக்கும் என்றும் நம்புகிறேன். திரைப்படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். மனோஜ் பாரதிராஜாவை பத்திரிகையாளர்கள் மிகப்பெரிய இயக்குந‌ராக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். தந்தையை மிஞ்சிய தனையனாக‌ வருவதற்கு என்னுடைய வாழ்த்துகள்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது…அனைவருக்கும் என்னுடைய அன்பும் வணக்கமும். என்னுடைய தம்பி இயக்குநராக ஆகியிருப்பது ஒரு மகிழ்ச்சியான தருணம். சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி. மிகப்பெரிய சாதனை படைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அவரது திறமைக்கு எதுவும் ஈடாகாது. உலகத்தின் தலைசிறந்த ஓவியராக‌ வரவேண்டியவர் பாரதிராஜா.

தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் பேசியதாவது…இனிய மாலை வணக்கம். ‘மார்கழி திங்கள்’ டைட்டில் ரொம்ப அற்புதமாக இருக்கிறது. இப்படத்தில் நிறைய விஷயம் இருக்கும் என்று நம்புகிறேன். ‘அலைகள் ஓய்வதில்லை’ மாதிரி இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சுசீந்திரன் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். நல்ல படமாக அமைய வாழ்த்துகள்.

and also:இளையராஜா சார் கையை வச்சா அது ராங்கா போனதில்ல -‘மார்கழி

You May Also Like

More From Author

2Comments

Add yours

+ Leave a Comment