மனோஜ் பாரதிராஜா இவ்வளவு சீக்கிரம் திரைப்படத்தை இயக்குவார் என்று நான் நினைக்கவில்லை – நடிகர் கார்த்தி

Estimated read time 1 min read
Spread the love

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

MARGALI THIGAL (20)
MARGALI THIGAL (20)

நடிகர் கார்த்தி பேசியதாவது…அனைவருக்கும் வணக்கம், பாரதிராஜா ஐயா அவர்களுக்கு பெரிய வணக்கம். மனோஜ் பாரதிராஜா இவ்வளவு சீக்கிரம் திரைப்படத்தை இயக்குவார் என்று நான் நினைக்கவில்லை. இதற்கு காரணமான‌ சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி. இளையராஜா சாரை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இப்போது வரை அவரை முன்மாதிரியாக வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் தொடர்ந்து நிறைய படங்களுக்கு இசை அமைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். இந்தப்படம் கண்டிப்பாக நல்லபடியாக‌ வரும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் பேசியதாவது…இனிய மாலை வணக்கம். ‘மார்கழி திங்கள்’ டைட்டில் ரொம்ப அற்புதமாக இருக்கிறது. இப்படத்தில் நிறைய விஷயம் இருக்கும் என்று நம்புகிறேன். ‘அலைகள் ஓய்வதில்லை’ மாதிரி இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சுசீந்திரன் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். நல்ல படமாக அமைய வாழ்த்துகள்.

இயக்குந‌ர் திரு பேசியதாவது…மனோஜ் மற்றும் சுசீந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்த படம் கண்டிப்பாக நல்ல படமாக அமையும் எனவும் வாழ்த்துகிறேன்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது…மனோஜ் கட்டாயம் இயக்குந‌ராக ஆவார் என்று நம்பினேன், அது தற்போது உண்மையாகி உள்ளது. சுசீந்திரன் மூலம் இது நடந்துள்ளது. பாரதிராஜா அவர்கள் இயக்குந‌ராக இருந்து இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். மனோஜின் திறமை மீது எனக்கு மிகவும் நம்பிக்கை உள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன்.

இயக்குந‌ர் சங்க செயலாளர் ஆர்.வி. உதயகுமார் பேசியதாவது…

மனோஜ் இயக்குந‌ராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். பல வருடங்களாக அவரிடம் இதை நான் சொல்லிக் கொண்டே இருந்தேன். ஒரு அற்புதமான இயக்குந‌ராக உருவாக்குவதற்கு மனோஜ் பாரதிராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்த திரு சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி. இந்த திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை நினைத்துக்கொண்டேன். இதன் பாடல்கள் மிக அழகாக ‘காதல் ஓவியம்’ பாடல்களை நினைவூட்டின‌. இசைஞானி இளையராஜா மற்றும் பாரதிராஜா அவர்களை பிரிக்க முடியாது, அவர்கள் உறவு என்றும் மறையாது. மனோஜ் பாரதிராஜா அவர்கள் புதிய அத்தியாயத்தை இப்படத்தின் மூலம் தொடங்குவார். கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு வாழ்த்துகள். இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும் எனவும் வாழ்த்துகிறேன்.

and also :‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours