‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

கதாநாயகன் ஷியாம் செல்வன் பேசியதாவது…
மனோஜ் பாரதிராஜா அவர்களால் தான் நான் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் உதவி செய்த அனைவருக்கும் நன்றி. பாரதிராஜா மற்றும் இளையராஜா சார் அவர்களுக்கு நன்றி. நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி.
கதாநாயகி நக்ஷா சரண் பேசியதாவது…

‘மார்கழி திங்கள்’ குழுவினர் அனைவருக்கும் நன்றி. பாரதிராஜா சார் அவர்கள் மிகவும் நட்பாக பேசுவார்கள். எனக்கு

வாய்ப்பளித்த மனோஜ் பாரதிராஜா மற்றும் சுசீந்திரன் அவர்களுக்கு மிகவும் நன்றி. படம் மிகவும் நன்றாக வந்துள்ளது.
கதாநாயகி ரக்ஷனா பேசியதாவது…
மனோஜ் பாரதிராஜா சார், சுசீந்திரன் சார் மற்றும் ‘மார்கழி திங்கள்’ படத்தின் அனைத்து குழுவினருக்கும் நன்றி. இளையராஜா சார் கையை வச்சா அது ராங்கா போனதில்ல. இந்த திரைப்படத்திற்கு அவர் இசை அமைத்துள்ளார், ரொம்ப நன்றி சார். இந்த திரைப்படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும், கண்டிப்பாக அனைவரும் பார்க்கணும்.
and also :கண்டிப்பாக இந்தப் படம் வெற்றியடையும், அப்போது என் மகனை பற்றி பேசுவேன் – இயக்குநர் இமயம்
[…] […]