மெட்ராஸ் ஐ-க்கான மருந்து அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான அளவிற்கு உள்ளது-அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மெட்ராஸ் ஐ குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை, தமிழ்நாடு அரசு இந்த நோய் குறித்து முறையாக கண்காணித்து வருகிறது, மெட்ராஸ் ஐ-க்கான மருந்துகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான அளவிற்கு உள்ளது…..சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் மெட்ராஸ்-ஐ கண் அழற்சிநோய் வார்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்….தொடர்ந்து கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்….
சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் கண் சிகிச்சைகள் குறித்து இன்று கேட்டு அறியப்பட்டது, பாதிக்கப்பட்டு சிகிச்சைகள் பெற்று வருபவர்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தோம் என்று கூறிய அவர் மெட்ராஸ் ஐ சென்னையில் அதிகரிக்க தொடங்கி உள்ளது, சென்னை மட்டும் இல்லாமல் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், புது டெல்லி வடகிழக்கு மாநிலங்களான அசாம் மேகாலயா திரிபுரா மிசோரம் போன்ற மாநிலங்களிலும் இந்த நோய் அதிகரித்து வருகிறது என்றார்….தொடர்ந்து பேசிய அவர் வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன்பாகவே இந்த நோய் பாதிப்பு கூடுதலாகி இருப்பதாகவும் இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களை பாதுகாப்பதற்கும் மீட்டெடுப்பதற்கும் இந்த மருத்துவமனையில் இன்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நூற்றுக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், கடந்த காலங்களில் வடகிழக்கு பருவ மழை வருவதற்கு முன்பு இது போன்ற நோய் வரும் பொழுது நூற்றுக்கணக்கான பேருக்கு இந்த நோய் வரும், முதல்வரின் விழிப்புணர்வின் காரணமாக தற்போது நூறுக்கும் கீழ் தான் இந்த நோய் பாதிப்பு இருக்கிறது..

எழும்பூர் கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ-க்கு என்று தனி வார்டு உள்ளது, இந்த நோய் இருப்பவர்களுக்கு கண் சிவந்து போய் இருக்கும் கண்களில் நீர் வழியும் கண்களில் எரிச்சல் ஏற்படும் கண்களில் அரிப்பு ஏற்படும் இதுதான் மெட்ராஸ் ஐ வருபவர்களுக்கு அறிகுறியாக இருக்கும், இந்த நோய் பருவநிலை மாறுபாடு மற்றும் ஒரு வகையான வைரசால் வருகிறது, மெட்ராஸ் ஐ ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டால் தொற்றிக் கொள்ளாது, குடும்பத்தில் ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் மற்றவருக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் கண் நோய் பாதித்தவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்திற்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தினார்.…இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி நல்ல நீரினால் கண்களை துடைக்க வேண்டும் கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுக்க வேண்டும், கண் மருத்துவர்கள் ஆலோசனை பெற்ற பிறகு சொட்டு மருந்துகள் விட வேண்டும், இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் பால், கிரேட், பச்சைக் கீரை காய்கறிகள் மீன் உள்ளிட்டவைகளை உட்கொள்வது நல்லது, எலுமிச்சம்பழம் நார்த்தங்காய் சாத்துக்குடி போன்ற பழ வகைகளையும் பயன்படுத்துவது நல்லது, இந்த வழிகாட்டி முறைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்….
இந்த மருத்துவமனையில் கண் பாதிப்பு ஜூலை 78, ஆக்.240 இந்த மாதம் 203 என்ற எண்ணிக்கையில் வந்து உள்ளனர், கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை கண் சிகிச்சை மூலம் 28,235 பேர் பயன்பெற்று இருக்கிறார்கள் என்று பெருமிதம் தெரிவித்தார்….தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவமனைகளிலும் மெட்ராஸ் ஐ காண மருந்துகள் தயார் நிலையில் உள்ளது, 420 மருத்துவர்களைக் கொண்டு இந்த நோய்க்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மருத்துவமனை உதவியாளர்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ளனர், மெட்ராஸ் ஐ குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை, தமிழ்நாடு அரசு இந்த நோய் குறித்து முறையாக கண்காணித்து வருகிறது முறையான சிகிச்சைகளும் அலிக்கப்பட்டு வருவதாகவும், இந்த நோய்க்கான மருந்துகள் போதுமான அளவிற்கு மருத்துவமனைகளில் உள்ளது என்றார்……
+ There are no comments
Add yours