Home featured நூல் சேலையில் முதலமைச்சர் ஸ்டாலின் உருவம்: பரமக்குடி நெசவாளர்கள் அசத்தல்!

நூல் சேலையில் முதலமைச்சர் ஸ்டாலின் உருவம்: பரமக்குடி நெசவாளர்கள் அசத்தல்!

4 min read
0
0
283
m k stalin s photo in cotton sarre
18 / 100 SEO Score

ராமநாதபுரம் மாவட்டம்பரமக்குடி கைத்தறி நெசவாளர், தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவம்பொறித்த சேலையை காட்டன் நுாலில் 3 டி தொழில் நுட்பத்தில் நெசவு செய்துள்ளனர்.

பரமக்குடி உதவி கைத்தறி இயக்குனர் அலுவலகத்தின் கீழ் 80க்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்குகிறது. இங்கு எலக்ட்ரானிக் ஜக்கார்டு பெட்டியின் உதவியுடன் முதல்வர் ஸ்டாலின்கையெழுத்திடுவது போன்ற உருவம், முன்னாள்முதல்வர் கருணாநிதி உருவம் பொறித்த சேலை நெசவு செய்யப்பட்டன.இதில் கருணாநிதியின் கண் கண்ணாடியை உற்று நோக்கினால் எந்த திசையில் திரும்பினாலும், பார்ப்பவரை நோக்கி நகரும் வகையில் 3டி தொழில் நுட்பத்தில் நெசவு செய்யப்பட்டன.

இச்சேலையை எமனேஸ்வரம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கூட்டுறவு சங்க நெசவாளர் சரவணன், உதவியாளர் குபேந்திரன் ஆகியோர் நெய்துள்ளனர். இதற்கான கம்ப்யூட்டர் டிசைன்களை சீனிவாசன் உருவாக்கியுள்ளார். பொதுவாக ஜக்காட் பெட்டிகளில் 120 மற்றும் 240 கம்பிகள் கொண்ட அட்டை உதவியுடன் நெய்வர். ஆனால் எலக்ட்ரானிக் பெட்டியில் 480 கம்பிகளுடன் மிகவும் நுணுக்கமான எந்த உருவங்களையும் நெசவு செய்ய முடியும்.

இச்சேலை டிசைன் செய்ய 15 நாட்களும், நெய்வதற்கு 7 நாட்கள் என ஆகி உள்ளது. பொதுவாக உருவம் பொறித்த சேலைகள் பட்டு, பம்பர் நுால்களில் நெசவு செய்ய முடியும்.ஆனால் 80ம் நம்பர் கோமுடு ரக காட்டன் நுாலில் உருவங்கள் பதித்த சேலைகள் நெய்வது மிகவும் கடினம். ஒரு சேலையை உருவாக்க ரூ. 30 ஆயிரத்திற்கு மேல் செலவாகிறது. இதன் மதிப்பு சேலைகளின் எண்ணிக்கையை பொறுத்து விலை குறைவாக கொடுக்க முடியும் என்கின்றனர், நெசவாளர்கள்.

கைத்தறி உதவி இயக்குனர் சந்திரசேகரன் கூறியபோது, முதல்வர் கைத்தறி துணி ரகங்களை அரசு ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் உடுத்த வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வரின் உருவம் பொறித்த சேலை நெசவு செய்யப்பட்டு, முதல்வருக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது, என்றார்.

Load More Related Articles
Load More By admin
Load More In featured

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

This revolutionary concept can ‘unshackle’ poor folks from pay day loans and bad credit ratings

This revolutionary concept can ‘unshackle’ poor folks from pay day loans and bad credi…