லக்கிமேன் படக்குழு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, ரேச்சல் உள்ளிட்டப் பலரது நடிப்பில் செப்டம்பர்1 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘லக்கிமேன்’. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

எடிட்டர் மதன் பேசியதாவது, “இந்தப் படம் எனக்கு ஸ்பெஷல். நான் நிறைய ஹாரர், த்ரில்லர் படங்களில் வேலை செய்திருக்கிறேன். எனக்கு ஃபீல்குட் படங்களில் வேலை பார்க்க வேண்டும் என்பதும் விருப்பம். அது இந்தப் படம் மூலம் நிறைவேறி உள்ளது. இயக்குநர் பாலாஜி சாருக்கும் நன்றி. மியூசிக் டைரக்டர் ஷானுக்கு நன்றி. என்னுடன் பேசி கலந்துதான் அவரும் வேலை செய்தார். எனக்கும் அது வேலையை எளிதாக்கி கொடுத்தது. இந்தக் கதையில் யோகிபாபு சார் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அவரைதான் இயக்குநரும் உறுதி செய்துள்ளார். வசனங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். யார் பார்த்தாலும் இந்தப் படத்தை கனெக்ட் செய்து கொள்வார்கள். நடிகர்கள் எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். அனைவருக்கும் நன்றி”.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது, “பாலாஜி அண்ணனை சிறு வயதில் இருந்தே எனக்குத் தெரியும். இந்த காலத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்களில் யோகிபாபுவும் ஒருவர். ‘லக்கிமேன்’ போன்ற கதைக்களம் எனக்கு பெரும் சவாலாக இருந்தது. வாய்ப்பு கொடுத்த பாலாஜி அண்ணனுக்கு நன்றி. யோகிபாபு சார் நடிப்பை படத்தில் ரசித்துப் பார்த்தேன். இது மிகப்பெரிய விஷயம். மிகப்பெரிய புகழ் அவர் அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன். ஃபீல்குட் படங்களின் வரிசையில் கண்டிப்பாக ‘லக்கிமேன்’ இருக்கும். பாடல்களில் பாலாஜி நிறைய இன்புட்ஸ் கொடுத்தார். என்னுடைய குழுவுக்கும் நன்றி. சக்திவேல் சார் படத்தை எடுத்தால் அதை பார்வையாளர்கள் நம்புகிறார்கள். அது மிகப்பெரிய பலம். உறுதுணையாக இருக்கும் சக்தி சாருக்கு நன்றி”.
+ There are no comments
Add yours