யோகி பாபுவின் லக்கி மேன் செப்டம்பர்1 வெளியீடு
நடிகர் யோகிபாபு, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் பாலாஜி சொன்னது போல என்னுடைய வாழ்வை திரும்பி பார்ப்பது போலதான் இருந்தது. இதற்கு முன்பு நான் நடித்த சில படங்களில் நாலஞ்சு சீன் என்னை வைத்து எடுத்து விட்டு ஏன் போஸ்டர் போடுகிறீர்கள் எனக் கேட்டேன். அது ரசிகர்களையும் ஏமாற்றுவது போலதானே? அதைக் கேட்டால்தான் அனைவருக்கும் பிரச்சினை. நான் ஷூட்டிங் வரமால் எங்கு போவேன்? என்னைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் சும்மா. நான் கதை கேட்டு படம் பண்ணுவதை விட அவர்களின் கஷ்டத்தைக் கேட்டுதான் படம் செய்வேன். படம் ரொம்பவே பிடித்து நடித்தோம். படத்தில் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருமே சிறப்பாக செய்துள்ளனர்” என்றார்.

நடிகை ரேச்சல், “இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் வேணுகோபால், யோகிபாபு சார், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன்”.
நடிகர் வீரா பேசியதாவது, “படக்குழுவில் பாசிட்டிவாக ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. யோகிபாபு, ரேச்சல் அனைவருக்கும் வாழ்த்துகள். யோகிபாபுவின் அனைத்து படங்களுமே பார்த்து நான் ரசிகனானேன். அவருடன் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. கடின உழைப்பாளி அவர். உடல் நலனை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்

தலைவா”.
நிகழ்வில் நடிகை சுஹாசினி குமரன் பேசியதாவது, “இந்த வாய்ப்பு கொடுத்த பாலாஜி அண்ணாவுக்கு நன்றி. இந்தப் படத்தில் நான் கடைசியாகதான் இணைந்தேன். படத்தில் பெரிய நடிகர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் நடிப்பு எனக்கு பிடிக்கும். இதில் நானும் இருப்பது மகிழ்ச்சி”.
குழந்தை நட்சத்திரம் சாத்விக், “படப்பிடிப்பு போனது போலவே இல்லை! ஜாலியாகவே இருந்தது. யோகிபாபு, ரேச்சல் அக்காவுக்கு நன்றி”.
+ There are no comments
Add yours