பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் செப்டம்பர்1 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘லக்கிமேன்
இயக்குநர் பாலாஜி வேணுகோபால் பேசியதாவது, “இதற்கு முன்பு நான் ‘பானிபூரி’ என்ற குறுந்தொடர் இயக்கி இருந்தேன். அதற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. யோகிபாபுவை பார்த்து கதை சொன்னதும் அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. அவர் வாழ்க்கையை திரும்பி பார்ப்பது போல உள்ளது என உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். அவரை தமிழ் நடிகர் என சொல்வது குறைவு. இந்திய நடிகர் என சொல்லும் அளவுக்கு திறமையானவர். அவரைப் பற்றிய பல தவறான புரிதல்கள் நிச்சயம் நீங்க வேண்டும். அவர் வீட்டில் ஒருவருக்கு மெடிக்கல் எமர்ஜென்சி எனும் போது கூட ஷூட்டிங் வீணாகக் கூடாது என அந்த கஷ்டத்தை மறைத்து எங்களுக்கு நடித்துக் கொடுத்தார். என்னுடைய உதவி இயக்குநர்களுக்கு நன்றி. அவர்கள் எனக்கு உதவிய இயக்குநர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்கள் மட்டுமில்லாது தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றினர். ஷான் ரோல்டன் என்றாலே ட்யூன் தான். சிறப்பாக செய்துள்ளார். சுஹாசினி சின்ன ரோலாக இருந்தாலும் எனக்காக நடித்துள்ளார். படத்தை வெளியிடும் சக்தி சாருக்கு நன்றி. நண்பர்கள், குடும்பத்தினர் கொடுத்த ஆதரவுக்கு நன்றி”.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன், “இது மிகவும் அருமையான படம். இந்தப் படம் பார்க்கும்போது ‘குட்நைட்’ பார்ப்பது போல இருந்தது என பலரும் சொன்னார்கள். என்னைக் கேட்டால், யோகிபாபு சாருக்கு ‘மண்டேலா’வுக்கு பிறகு ‘லக்கிமேன்’ என சொல்வேன். சிறந்த நடிகர் அவர். பாலாஜி வேணுகோபால் சார் சிறந்த இயக்குநர். படத்தில் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். படத்திற்கு ஆதரவு தாருங்கள்”.
நடிகர் அப்துல் பேசியதாவது, ’’தீரா காதல்’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி நன்றாக எழுதி இருந்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த படக்குழுவுக்கும் நன்றி” என்றார்.
காஸ்ட்யூம் டிசைனர் நந்தினி நெடுமாறன், “தனிப்பட்ட முறையில் இது என்னுடைய முதல் படம். என் மீது நம்பிக்கை வைத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.
+ There are no comments
Add yours